சிரிக்க சில நிமிடம் ...




01.

கணவன்: உன்  மாமனார் போன் பண்ணியிருந்தார்.இங்க வாறாராம்.

மனைவி: உங்க அப்பா எண்டு சொல்லவேண்டியதுதானே!

கணவன்: உனக்கு உன்ர சொந்தங்களெண்டாத்தானே பிடிக்கும்.

 

02.

கீதா: வர வர என் மனுஷன் மோசமாக்கிட்டே வர்றாரடி.

சீதா: ஏன் ? குடிச்சுட்டு வந்து அடிக்கிறாரா?

கீதா : இல்லைடி! டாக்டர் கொடுத்த மருந்தைக் கூட பிக்போஸ் முடிச்சப்புறம் தான் விழுங்குவன் எண்டு அடம் பிடிக்கிராராடி!

 

03

நோயாளி; நான் திரும்பவும் எப்ப வரணும் டொக்டர்?

டொக்டர் : கடைசி ஒரு, ஆயிரம் ரூபா கையில கிடைக்கும்போது வந்தா சரி.

 

04

தந்தை: சார் ,என்  பொண்ணை காலையில இருந்து காணம் .புகார் குடுக்கணும் சார்.

போலீஸ்: அதோ போறாரே ,அவர்கிட்ட போய் சொல்லுங்க, அவர் தான் உங்க சம்பந்தியாக இருக்கணும்.

தந்தை: என்ன சார், என் பொண்ணைக் காணேலை ன்னு சொல்றன் ,நீங்க அவர்கிட்ட சொல்லச் சொல்லுறீங்க!

போலீஸ்: அவரும் அவருடைய பையனைக் காலையில இருந்து காணேல்லை என்று புகார் கொடுத்திட்டு  போறார் .அதுதான்

 

05

பாலு: யோகம் அடிக்கப் போகுது என்று நம்ம ஜோசியர் சொன்னது சரியாய்ப் போச்சு.

வேலு: லாட்டரி ஏதாவது விழுந்திட்டுதா?

பாலு: நீ வேற, நேற்று என் பெண்டாட்டி யோகத் தோட  நடந்த சண்டையில கடைசியில அவ அடிச்ச அடியில கன்னம் வீங்கிப் போச்சு.

 

06

லலிதா: எடி ,உங்க ஆபிசுக்குள்ள பாம்பு வந்த எண்டு சொன்னியே. அப்புறம் என்னாச்சு?

கவிதா: அதுவும் எங்ககூடத் தூங்கிடிச்சு.

 

07

சுமதி: இந்த புடவையை எப்ப எடுத்தாய்? வருஷத்திற்கா? தீபாவளிக்கா?

சுந்தரி: புடவைக் கடையில பவர் கட்டான போது.

 

08

கவுண்டன்: இது இரண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

செந்தில்:  அப்பிடியா அண்ணை. அப்போ இவனுக்கு என்ன வயசு? அவனுக்கு என்ன வயசு?

கவுண்டன்: !!

 

09

நண்பன்1: டே , நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறான் வந்துவிடு. மறக்காதை!

நண்பன் 2: கண்டிப்பாய் வருவன் மச்சி. உனக்கு ஒரு கஷ்டம் வருகுது எண்டால் நான் சும்மா இருப்பனே.

 

10.

சாப்பிட வந்தவர் : இந்த மோசமான சாப்பாட்டை  யார் சாப்பிடுவர்? கூப்பிடு உங்க மனேஜரை.

பரிமாறுபவர்: அவரும் சாப்பிட மாட்டார் சார்.

 

11.

அப்புசாமி: கள்ள நோட்டு அடிச்சி நீ எப்பிடி போலீசில மாட்டினே?

குப்புசாமி: பாங்க் கவர்னர் கையெழுத்துப் போடுற இடத்தில குப்புசாமி எண்டு கையெழுத்தைப் போட்டிட்டன்.

 

12.

நீதிபதி: நீ செய்த குற்றத்திற்காக உனக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறேன்.

குற்றவாளி: எவ்வளவு வெயிற்றைத் தூக்கணும் சார்?

 

13.

ஹலோ ஹலோ இன்ஸ்பெக்டர், பாரதி நகர் 3வது தெரு 2வது நம்பர் வீட்டிலிருந்து மயில்சாமி பேசுறேனுங்க, 3 இரட்டை வடை சங்கிலி , 2 முத்து வளையல் , 4  வைர மோதிரம்,  20 ஆயிரம் ரொக்கப் பணம் இவ்வளவுதான் திருடியிருக்கேன், நாளைக்கு வீட்டுக்காரங்க அதிகப்படியான உங்களிட்ட சொன்னா நம்பாதீங்க!

 

14.

ரமேஸ்: எங்கப்பாவுக்கு இன்டர்நெட் எண்டால் என்னெண்டு தெரியாதடா?

சுரேஸ்: எப்பிடி சொல்லுறே?

ரமேஸ்: வாங்கினா கொசுக்கள் கடியாதெல்லோ, எண்டு கேட்க்கிறாரடா?

 

15.

மனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு.

கணவன்: சரி அதுக்கு என்ன இப்போ?

மனைவி: நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன் : அடப்பாவி...! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

தொகுப்பு :செ.மனுவேந்தன் 


0 comments:

Post a Comment