கொரோனா வைரஸ் அலைகள்" / பகுதி 04

"முதல் மற்றும் இரண்டாவது 

கொரோனா வைரஸ் அலைகள்" 

 


3] சூடான வானிலை கோவிட் 19 ஐ குறைக்க உதவுகிறதா ?

 

சில சுவாச நோய்கள், உதாரணமாக சளி மற்றும் குளிர் காச்சல் போன்றவை குளிர் மாதங்களில் பொதுவானவை [Some respiratory illnesses, like colds and influenza (flu), are more common in the colder months]. ஆனால் கோடை காலத்தில் அவை பெரிதாக தென்படுவதில்லை. எனவே கோவிட் 19 அப்படி அமையலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் பல வல்லுனர்களிடம் இருந்தது என்னவோ உண்மைதான்.

 

4]  வல்லுநர்கள், ஏன் கோவிட் 19 இன் இரண்டாவது அலை பற்றி  கவலைப்படுகிறார்கள்?

 

உண்மையில் டிசம்பர் 2019 இல் ஆரம்பித்த கொரோனா வைரஸின் கெடுபிடிகள், உலகின் பல பாகங்களில் மார்ச் 2020 அளவில் அதி தீவிரமாகி, பல நாடுகள் மக்களை முடக்கினார்கள். ஆகவே தனிமை படுத்துதல், நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கைபிடித்தல், ஓரளவு வெற்றி கொடுத்து, கொரோனா வைரஸ் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்தது போல் தோன்றியது, அரசும் கொஞ்சம் கொஞ்சமாக ஜூன் / ஜூலை 2020 அளவில் தளர்வு ஏற்படுத்தியது, ஆனால் மனித நடத்தை ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள். நாம், சமூக இடைவெளி குறைவதையும், முகமூடி அணிவது குறைவதையும் கண்டோம். அது மட்டும் அல்ல, கோடையில் அதிகமான கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் நடை பெறுவதும் வழக்கம். கோடை நல்ல வானிலை என்பதால், மக்கள் நடமாட்டமும் கூடியது. உதாரணமாக கடற்கரை, மதுக் கடை பொது விடுதி [Pub] போன்றவைகள் நிறைந்து வழிந்தன. எனவே இந்த மக்களின் நடத்தை மாற்றங்களின் தாக்கத்தை, அக்டோபர் / நவம்பர் 2020 அளவில், நாம் அனுபவிக்க வேண்டி வரலாம் என்பதே, வல்லுனர்களின் இன்றைய கவலை ஆகும்.

 

5] கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் விளைவு மோசமாக இருக்குமா ?

 

அவ்வாறு இருக்கவே, இன்றைய நிலையில், சந்தர்ப்பம் அதிகமாக உண்டு, ஏனென்றால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர், தான் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார் என அறியமுன், இது சில கிழமைகள் எடுப்பதால், அதற்கு முதல், அதை பலருக்கு கடத்துவதற்கு சந்தர்ப்பம் பல இருப்பதாலாகும். அது மட்டும் அல்ல, இந்த கோவிட் 19 வைரஸ், மற்ற சுவாச மூலம் பரவும் வைரஸ்களுடன், உதாரணமாக குளிர் காச்சல் வைரஸ் [other respiratory viruses like influenza] உடன் சேர்ந்து அக்டோபர் / நவம்பர்  2020 க்கு அல்லது அதற்கு பிறகு தாக்கும் பொழுது என்ன நடக்கும் என்பது பெரும் கேள்விக் குறியாகவே உள்ளது? மேலும் குளிர் காலம் வர, மக்கள் கூடுதலாக அடைக்கப்பட்ட , காற்றோற்றம் குறைந்த  வீட்டிற்குள், அதிக நேரம் செலவிடுவார்கள். இதுவும் கொரோனா வைரஸ் கடத்தலை அதிகரிக்கலாம்.

 

6] எவருக்கும் இரண்டு தடவை கொரோனா வைரஸ் தொற்றலாமா ? 

 

இதுவரை செய்த ஆய்வுகளில் இதற்கு பதில் இல்லை. இதைப்பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

 

7] எப்பொழுது சமூகத்தில் நோய்த் தடைக் காப்பு நிலை [herd immunity / மந்தை எதிர்ப்பு சக்தி], கொரோனா வைரஸுக்கு எதிராக ஏற்படும் ?

 

வல்லுனர்களின் தரவுகளின் படி, குறைந்தது 70% மக்கள் சனத் தொகை, கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்க்கும் தன்மையை கொண்டால் மட்டுமே [about 70% of the population needs to be immune to this coronavirus] இது சாத்தியம் ஆகும். இன்னும் நாம் அந்த இலக்கை அடையவில்லை. அது மட்டும் அல்ல, பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இன்னும் தடுப்பூசியும் [A widely available, safe and effective vaccine] வரவில்லை என்பது மற்றும் ஒரு குறையாகும்.  

 

8] எப்படி ஒருவர் கொரோனா வைரஸ் நோயின் அறிகுறி தென்பட்டால், வீட்டில் கையாளுவது ? 

 

இன்று கொரோனா வைரஸுக்கு என்ற ஒரு குறிப்பிட்ட சிகிச்சை ஒன்றும் இல்லை, எனினும் நீங்கள் ஓரளவுக்கு அதன் அறிகுறிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் அல்லது அதன் வேதனையை எளிதாக்கலாம். உதாரணமாக, உங்களுக்கு உயர் வெப்ப நிலை [high temperature] இருந்தால், கட்டாயம் நீங்கள் போதுமான அளவு  ஓய்வு எடுக்க வேண்டும், போதுமான அளவு திரவம், குறிப்பாக நீர் அருந்தவேண்டும், நீங்கள் சங்கடமாக இருப்பதாக உணர்ந்தால், paracetamol அல்லது ibuprofen  எடுக்கலாம்,

 

அதேமாதிரி, நீங்கள் இருமலில் அவதிபட்டால், முதுகில் படுப்பதை தவிர்த்து, ஒரு பக்கமாக படுங்கள், அல்லது நிமிர்ந்து இருங்கள் [Lie on your side or sit upright], ஒரு தேக்கரண்டி தேன் [a teaspoon of honey] இருமலை எளிதாக்கலாம், ஆனால் சிறு குழந்தைக்கு கொடுக்க வேண்டாம். அப்படியே, நீங்கள் மூச்சு விடுவது கஷடமாக இருந்தால், உங்கள் அறையை வெப்பம் தனிக்கக் கூடியதாக, அல்லது ஓரளவு குளிராக சரிபடுத்தவும் அல்லது ஜன்னலை திறந்து விடவும். கட்டாயம் விசிறி [fan] பாவிக்க வேண்டாம், அது வைரஸை பரப்பி விடும். கட்டாயம் பீதியடைய வேண்டாம், அது உங்களை மோசமாக்கிவிடும். மூச்சு விட திணறுவது, கட்டாயம் கொரோனா வைரஸின் திவீரத் தன்மையை உணர்த்தும். அப்படியானால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்று, அதன் படி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

வைரஸ்கள் காலப்போக்கில் பரிணாமம் அடைகின்றன. அது மரபணு திடீர்மாற்றம் [Mutation] அடைகின்றன. இதில் என்ன அதிசயம் என்றால், இவையும் இயற்கை தேர்வு அடிப்படையில் மாற்றமடையக் கூடியவை [They may also evolve through “natural selection”]. எனவே, சிலவேளை, இந்த மரபணு திடீர்மாற்றம், வைரஸ் தப்பிப்பிழைக்கவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம் [but sometimes a mutation gives a virus a better chance of surviving and reproducing]. அது மட்டும் அல்ல, இந்த திடீர் மாற்றம், வைரஸை விலங்குகளில் இருந்து மனிதருக்கு தொற்ற வழிசமைக்கலாம் அல்லது கலங்களுக்குள் நுழைய உதவும் அதன் [வைரஸின்] மேல் உள்ள பாதுகாக்கும் உறையில் உள்ள கூர்முனைகளின் வரிசையில், மாற்றங்களை ஏற்படுத்தி, அதனால், அதன் திறனை மேம்படுத்தி, நுரையீரல் கலத்திற்குள் நுழையலாம் அல்லது நோயெதிர்ப்பு அமைப்பால் உடலில் உற்பத்தியாகும் பிறபொருளெதிரியை [ஆன்டிபாடியை]  தவிர்க்கும் தன்மை கொண்டதாக மாறிவிடும் [a random change in the make-up of the spikes, the projections covering the virus that help it enter cells, might improve its ability to enter a lung cell or to avoid antibodies produced by the immune system]. இது அதனின் ஒரு ஆபத்தான இயல்பு ஆகும். மேலும், ஜெர்மனி நாட்டில் உள்ள, பீலவில்ட்  [Bielefeld] நகரில், 22 / 09/ 2020, அன்று நடந்த குடும்ப நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட, புலம் பெயர் தமிழர்களில், 40 இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப் பட்டது ஒரு உதாரணமாகும். ஆகவே நீங்கள் இயன்றவரை இதை தவிர்க்கும் முறைகளை கட்டாயம் கடைப்பிடித்து உங்களையும் வாழவைத்து மற்றவர்களையும் வாழவிடுங்கள்! 

 

இந்து புராண, 'சூரன் - ஸ்கந்தன்' கதை பொதுவாக எல்லோருக்கும் தெரியும். இங்கு சூரன் ஒவ்வொரு முறையும் மாறு வேடங்களில் சண்டையிட்டான். எந்த வேடத்திற்கும் கலங்காமல் ஸ்கந்தக் கடவுள் போர் செய்ய ..... கடைசியில், வடிவத்தை மாற்றிக்கொண்டு மாமரமாக மாறினான். மரமாக நிற்கும் போதே சூரனுடைய ஆர்ப்பாட்டமும் தன்னால் முடியும் என்னும் அசைவுகளும் அடங்கிவிட்டன. அப்படித்தான் கொரோனா வைரஸின் செயலும். அது காலம், சூழ்நிலைக்கு ஏற்ப திடீர் மாற்றம் அடைந்து மீண்டும் மீண்டும் தாக்க முயலும். அது என்று, மாமரத்தை போல், ஒரு அசைவை அல்லது ஆர்ப்பாட்டத்தை இழக்கிறதோ, அன்று கோவிட் 19 முற்றாக அழிந்தது எனலாம் !!      

  

நன்றிகள்   

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

✋✋முற்றும்✋✋


0 comments:

Post a Comment