மனைவி: எனது 30 ஆவது பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
கணவன்: ஒரு சீன நாட்டுச் சுற்றுலா, எப்படி இருக்கும்? விருப்பமா?
மனைவி: ஆஹா, ஓஹோ! அவ்வளவுக்குப் போவீர்களா? அப்படி என்றால் 60 ஆவதுக்கு என்ன செய்வீர்களாம்?
கணவன்: திரும்ப அங்கு வந்து கூட்டிக்கொண்டு வந்து ஓர் 2 நாள் இங்கு வைத்திருப்பேன்!
--------------------
ஒரு தந்தை தன் மகன் பொய் சொல்லுகின்றானோ என்று சந்தேகப்பட்டு ஒரு லை டிரெக்டர் கருவி ஒன்றை வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அது யாராவது பொய் சொன்னால் உடனே அது பொய்யின் அளவுக்கேற்ப 'பீப்' என்று சத்தம் இடும். அன்று மகன் கல்லூரி செல்லாது வேறு எங்கோ போய்விட்டு வருகின்றான் என்ற சந்தேகத்தில்,
தந்தை: ராமு இன்று கல்லூரிக்குச் சென்றாயா?
மகன்: ஆமாம் அப்பா!
கருவி: 'பீப்'
மகன்: இல்லை அப்பா, படம் பார்க்கத்தான் போனேன்!
கருவி: 'பீப்'
மகன்: சொறி அப்பா; நண்பர்களோடு பியர் குடிக்கப் போனேன்!
கருவி: ' '
தந்தை: அடே! நான் எல்லாம் அந்தக் காலத்திலை உப்படிப் பொய் சொல்லி குடிச்சுத் தெரிந்ததே இல்லைத் தெரியுமா?
கருவி: 'பீ . . ப்'
தாய்: ஹீ..ஹீ... உங்கடை மகன்தானே; அப்படியே உங்களைப் போலத்தானே இருப்பான்!
கருவி: 'பீ..................ப்'
--------------------
ஒருவர் அவசர அவசரமாக, மூச்சு வாங்க ஓடி வந்து ஒரு வீட்டுக்கு முன் போய், அங்கு நின்ற வீட்டுக்காரியிடம்:
ஒருவர்: அம்மா, அம்மா இங்கு எங்காவது போலீஸ் யாராவதைக் கண்டனீங்களா?
வீட்: இல்லையே!
அவர்: எங்காவது கிட்டிய தூரத்தில்?
வீட்: இல்லவே இல்லை!
அவர்: உதவிக்கு அவசரத்துக்கு வரக்கூடிய யாரவது அக்கம் பக்கத்து ஆம்பிளைகள்?
வீட்: அப்படி ஒருவருமே இல்லை; எல்லாரும் வேலைக்குப் போய்விடடார்களே!
அவர்: உங்க வீட்டுக்குள்?
வீட்: அப்படி ஒருவருமே இல்லை அப்பா!
அவர்: அப்ப சரி; (கத்தியைக் காட்டி) மரியாதையாய் உள்ளுக்குப் போய் எல்லாப் பணம், நகைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வாங்க!
--------------------
ஒரு வழிப்போக்கரை ஒரு திருடன் கத்தியைக் காட்டி மறித்து,
திருடன்: குத்திக் போடுவேன், உன்னிடம் இருக்கும் உன் பணம், நகை, பொருள் எல்லாவற்றையும் தாமதிக்காமல் என்னிடம் கொடு!
வழிப்: அடே அப்பா, நான் இந்தத் தொகுதியின் M.L.A. அப்பா! என்னிடமேயே திருடுகிறாயா!
திருடன்: [ஒரு வகை] அப்படியா? சீவிப் போடுவேன், உன்னிடம் இருக்கும் என் பணம், நகை, பொருள் எல்லாவற்றையும் தாமதிக்காமல் என்னிடம் திருப்பிக் கொடு!
திருடன்: