👦👧👨👩👪👫👬👭👮👯👰👱👲👳👴👵👶👷👸👹👺👻👼👽👾😀😁😂😃😄😅😆😇😉😊😋😌😍😎😏😐😑😒😓😔😕😖😗😘😙😚😛😜😝😞😟😠😡😢😣😤😥😦😧😨😩😪😫😬😶😵😴😳😲😱😰😯😮😭😷🙎🙍🙌🙋 -இவை ஏன் இங்கு என நீங்கள் வினவலாம். மனிதர்கள் பலவிதம், அவர்கள் கருத்துகள் ,சிந்தனைகள், வாழும் வழிகள், எண்ணங்கள் , ஒரு கருத்தினை விளங்கிக்கொள்ளும் வகைகள் என்பன ஒவ்வொருவருக்கு ஒருவர் வித்தியாசமானவை.
இன்று இதை ஏன் குறிப்பிடவேண்டும் ?
அன்று2010, ஐப்பசி மாதம் முதலாம் திகதி . அன்றுவரையில் ஒரு நூல் வகை சஞ்சிகையில் ஆசிரியனாக இருந்து, திருப்தியிலாத நிலையில் சலிப்படைந்து , இணையத்தளத்தில் 'தீபம்' எனும் சஞ்சிகையாக ஒளிவிளக்கேற்றிய நாள். ஆம் இன்று தீபம் சஞ்சிகை தனது 13 வது ஆண்டினை நிறைவேற்றி மகிழ்கிறது.🎂
அப்பப்பா! ஆரம்பித்த முதல் மாதம் கிடைத்த நல் ஆர்வமுள்ள வாசகர்களின்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், தமிழர் வாழ் தேசங்கள் அனைத்திலுமிருந்து தொடர்ந்து தினசரி ஊக்கம் அளித்த பல்லாயிரம் வாசகர்கள் ,
எம்மை ஊக்கத்துடனும் ,வெற்றியுடனும் 13 வது ஆண்டினையும் கடக்க வைத்துள்ளனர்.
எம்மைப்போல் விளம்பரவருவாய் நோக்கமின்றி , தமிழ் மொழியும் ,தமிழ் சமுதாயமும்
வளர்ச்சி கருதி ஆரம்பித்த பல்வேறு
இணைய சஞ்சிகைகள் சில வருடங்களில் நின்று போக, பல்வேறு நெருக்கடிகள்,இழப்புகள் மத்தியிலும் ,வாசகர்கள் தரும் உற்சாகத்திலேயே நாம் 13 ஆவது அகவையினை சந்தித்துள்ளோம் என்பதனை நன்றியுடன்
நோக்குகிறோம்.
எமது சஞ்சிகைக்கு சிறந்த ஆக்கங்கள் மூலம் உயிர் கொடுத்து ,
உணர்வூட்டி வளர்த்துவரும் வரும் தீபம் எழுத்தாளர்களுக்கும்
நாமென்றும் நன்றியுடையவர்களாக உள்ளோம்.
என்ன ஆச்சரியம் என்று, இன்னும் நீங்கள் கேட்கலாம். இது ஒரு surprised
birthday என்றுதான் வைத்துக்
கொள்ளுங்களேன்.
உங்கள் வாழ்த்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியினுள் வரவேற்கிறோம். அல்லது உங்கள் கருத்துக்களை s.manuventhan@hotmail.com என்ற முகவரியில் அனுப்புங்கள்.நன்றிகள்.
✎📰📂📚📻🕿✍📺🄭💻
10 ஆவது அகவை வாழ்த்துக்கள் . தங்கள் தமிழ் ,இலக்கிய சேவை மேலும் தொடர ,வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைத்தும் உங்கள் பதிவுகள் பயனுள்ளவை. வலுவானவை. சிறந்த படைப்புகள்.10ஆவது அகவை வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்,நன்றிகள் ஒரு வாசகனாக.
ReplyDeleteஉங்கள் முயற்சி வியக்கத்தக்கது.அதிலும் 10 வருடங்கள் அயராத உழைப்பு, அதிலும் தினம் தவறாத வெளியீடு,பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள், நன்றிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்,10 வருடங்கள் எனும் ஒரு தசாப்தத்தை கடந்து வெற்றியாக தொடரும் "தீபம்" தமிழ் இலக்கிய சோலைக்கு உரமாக எமது வாந்த்துக்கள்
ReplyDeleteI don't have Tamil fonts. Otherwise I can write in Tamil. Anyway wishing you all success in your endeavour.
ReplyDeleteஅட,என்னவென்று சொல்வதம்மா ..என்றதும் என்னவோ என்று நுழைந்தேன், உங்கள் பக்கங்கள் பலதும் படித்திருக்கிறேன்.10 ஆண்டுகள் தொடர்ந்து பல் சுவையினையும் வெளியிடுவது என்பது எளிதான விடயமில்லை. பாராட்டுக்கள். அனைத்தும் தற்காலத்தில் அறியவேண்டிய பயனுள்ள விடயங்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉம் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஒளியூட்டும் தீபம் பெயர்கொண்டு ,நல் வழிகாட்டும் கட்டுரைகள்,கவிதைகள்,மற்றும்பல மேலும் தொடர,வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்றைய நன்நாளில் ஆரம்பமாகி
ReplyDeleteவெளிவந்து
இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை கடந்து பத்தாவது ஆண்டில் கால் பதிக்கும் தீபம் சஞ்சிகையை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
தீபம் சஞ்சிகையின் வாசகியாக
தீபம் இதழ் வெளி வந்ததிலிருந்து இன்று வரை தீபம் சஞ்சிகையில்
வெளிவருகின்ற
செய்திகளை ,
கட்டுரைகள்,
கவிதைகள்,
மற்றும் நடப்பு நிகழ்வுகளின்
தொகுப்பாக வெளிவரும்
பறுவதம் பாட்டியின் கதை,
சிரிப்பு துணுக்குகள் போன்ற
பலவகை
பரிமாணத்தை வழங்கிய இணையமாக தீபம்சஞ்சிகை இணையத்தில் வளர்ந்து நிற்கின்றது. இலத்திரனியல் உலகில் இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை கடந்து பத்தாவது ஆண்டில் கால் பதிக்கின்ற தீபம் சஞ்சிகை
இன்று பல வாசகர்களைக் கொண்டு உயர்ந்து நிற்கிறது. இலத்திரனியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்மைய வாசகர்களின் தேவைக்கமைய பல புதிய அம்சங்களையும் இணைத்து சிறப்பாக வெளிவரும் தீபம் சஞ்சிகை
பத்தாவது ஆண்டில் மேன்மேலும் உச்சங்களை தொட வாழ்த்தி நிற்கிறேன்.
இந்த வெற்றிப்பாதை மேலும்
தொடர்ந்து சிறப்புடன் பயணிக்க வாழ்த்துகிறோம்.
இன்றைய நன்நாளில் ஆரம்பமாகி
ReplyDeleteவெளிவந்து
இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை கடந்து பத்தாவது ஆண்டில் கால் பதிக்கும் தீபம் சஞ்சிகையை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
தீபம் சஞ்சிகையின் வாசகியாக
தீபம் இதழ் வெளி வந்ததிலிருந்து இன்று வரை தீபம் சஞ்சிகையில்
வெளிவருகின்ற
செய்திகளை ,
கட்டுரைகள்,
கவிதைகள்,
மற்றும் நடப்பு நிகழ்வுகளின்
தொகுப்பாக வெளிவரும்
பறுவதம் பாட்டியின் கதை,
சிரிப்பு துணுக்குகள் போன்ற
பலவகை
பரிமாணத்தை வழங்கிய இணையமாக தீபம்சஞ்சிகை இணையத்தில் வளர்ந்து நிற்கின்றது. இலத்திரனியல் உலகில் இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை கடந்து பத்தாவது ஆண்டில் கால் பதிக்கின்ற தீபம் சஞ்சிகை
இன்று பல வாசகர்களைக் கொண்டு உயர்ந்து நிற்கிறது. இலத்திரனியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்மைய வாசகர்களின் தேவைக்கமைய பல புதிய அம்சங்களையும் இணைத்து சிறப்பாக வெளிவரும் தீபம் சஞ்சிகை
பத்தாவது ஆண்டில் மேன்மேலும் உச்சங்களை தொட வாழ்த்தி நிற்கிறேன்.
இந்த வெற்றிப்பாதை மேலும்
தொடர்ந்து சிறப்புடன் பயணிக்க வாழ்த்துகிறோம்.
.
ReplyDelete.
ReplyDeleteபத்து வருடங்களாக பல் சுவை கதம்ப மலராத ஒளிர்விடும் 🔥 தீபம் சஞ்சிகைக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🌺
ReplyDeleteஎட்டு திக்கும் முட்டி மோதி அள்ளி வரும் செய்தி தொகுப்புகள், பலநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்,நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான கவிதைகள்,அதிசய உலகம் கற்பனை நிகழ்வுகள்,சமயம் சார்ந்த தொகுப்புகள், வைத்திய குறிப்புகள், அழகுக்குறிப்புகள், தமிழ் விழுமிய பண்பாடு செய்திகள் இவ்வாறான அனைவரின் மனநிலைக்கும் ஏற்ப பல் கோண முயற்சியின் ஆக்கங்களை அழகாக தந்து கொண்டிருக்கும் தீபம் சஞ்சிகை வாழ்த்துக்கள் வார்த்தைகள் இல்லை.தினம் தினம் புது வாசனை வீசும் தீபத்துக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 🌺 எந்த ஒரு தமிழ் திறன் சஞ்சிகையும் தராத நிறைவான ஆக்கங்களை தீபம் சஞ்சிகையில் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🌺
இன்னும் பல சகாப்தங்கள் தீபம் சஞ்சிகை வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹
சிறப்பான ஆக்கங்களை சுவை பட எழுதும் ஆசிரியர்களுக்கு,தொகுத்து வழங்கும் தொகுப்பாளருக்கும் தலை வணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
2012 ஆண்டில் இருந்து தீபத்தில், முதலில் ஓர் சில மாதம், மற்றவர்களின் ஆக்கங்களிற்கு என் கருத்துக்களை விரிவாக பதித்து, பின் 2012 செப்டம்பர் இல், 'என் அம்மாவுக்கு அர்ப்பணம்' என்ற என் முதல் கவிதையுடன் முழுமையாக எழுதத் தொடங்கி, இன்றுவரை அதனுடன் இணைந்து இருக்க, ஊக்கமும் ஆதரவும் தந்து, என் வளர்ச்சியில் பல பங்குகளை ஆற்றி இருக்கும் தீபத்திற்கும், அதன் ஆசிரியருக்கும், என் ஆக்கங்களுக்கு கருத்துக்களை பத்தித்தும், ஆக்கங்களை வாசித்தும் ஆதரவு தரும் தீபம் வாசகர்களுக்கும், இந்த தீபத்தின் பத்தாவது அகவையில் நன்றி கூறுவதுடன், தீபம் மேலும் மேலும் முன்னோக்கி வளமாக பயணிக்க என் வாழ்த்துக்களும், என் மனமார்ந்த நன்றிகளும் !!
ReplyDeleteநன்றி
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஅயராத முயற்சியில் 10 வருடங்கள். மிக்க நன்று. வாழ்த்துக்கள்
ReplyDeleteவளர்ந்து வரும் புதிய சமுதாயத்திற்கு எமது பழைய இலக்கியங்களையும், வரலாறுகளையும், நடப்பு வாழ்க்கைக்குரிய சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிகள்,குறும்படங்கள் என பன் முகத்துடன் பவனிவரும் தீபம் சஞ்சிகையின் 10 வது அகவையில் சந்திப்பதில் ஒரு வாசகனாக மகிழ்வடைவதுடன் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதீபம் வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து நான் அறியாத பல புதினங்களை அறிந்தோம். புரியாத பல கேள்விகளுக்கு விடை கண்டோம்.நன்று.ஒவ்வொரு பக்கமும் இனிது.வெவ்வேறு எழுத்தாளர்களுடன் வருவது மேலும் அருமை. ஒவ்வொருநாளும் தவறாது புதிய விடயம் இருக்கும் என்று நம்பி வந்து பார்ப்பேன். என் நம்பிக்கை என்றும் வீண் போனதில்லை. அற்புதமான பணி .வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழின் பெருமைகளைத் தரணியெலாம் பரப்பிவரும் தீபம் இதழ் மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteCongratulations to Thebam for doing 10 years of Tamil work for tamil readers. Thanks to the management for overcoming all challenges and for not letting go.
ReplyDeleteபத்தாம் ஆண்டு கொண்டாடும் எங்கள் தீபத்தின் சேவை தாெடர நல் வாழ்த்துகள் என்று ம் உங்கள் சேவை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteதமிழின் பழமையையும் அதன் இனிமையையும் தமிழ் உலகுக்கு 10 வருடங்களாக அளித்துக் கொண்டிருக்கும் உங்கள் சஞ்சிகை மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ,உங்கள் தமிழ் இணைய தளம் சிறப்பாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது அனைத்துப் பகுதிகளும் அருமை. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteசெந்தமிழுக்கு அரும்தொண்டாற்றும் வழிகளில் இதுவும் ஒன்றே! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான இணையத் தளம் வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபம் இணைய சஞ்சிகை பத்தாவது ஆண்டினை நிறைவு செய்துள்ள வேளையில் தீபம் சஞ்சிகையையும் அதன் பிரதம ஆசிரிரியர் மனுவேந்தன் அவர்களையும் மனமுவந்து பாராட்டி வாழ்த்துகிறோம். ஓர் இணைய சஞ்சிகை தொடர்ச்சியாக இடைவெளியின்றி இயங்கி வருதல் என்பது இலகுவானதல்ல. அண்மைக் காலங்களில் குடும்பத்தில் எதிர்பாராத இழப்புக்கள் ஏற்பட்டபோதும் அவற்றை தாங்கிக் கொண்டு இந்த இலக்கியப் பணியினை மனுவேந்தன் அவர்கள் தொடருகின்றார். மனுவேந்தன் அவர்களின் அயரா உழைப்பினை வாழ்த்தி வணங்குகிறோம். கதை ,கவிதை, கட்டுரை ,ஆன்மிகம் , அறிவியல் , உடல்நலம் , கலை ,நகைச்சுவை என்று பல கிளைகளையும் பரப்பி சமூகத்துக்கு பயனுள்ள நிழல்தரும் ஓர் ஆலமரமாக விளங்கி வரும் தீபம் இணைய சஞ்சிகை பல்லாண்டுகள் தொடர்ந்தும் தனது சேவையை தொடர அதன் ஆக்கங்களில் பங்களிக்கும் அனைவரையும் இதயம் நிறைந்து மீண்டும் வாழ்த்துகிறோம். தொடரட்டும் உங்கள் சமூகப்பணி.
ReplyDelete
ReplyDeleteதீபம் இணைய சஞ்சிகையில் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வு கதைகள் மற்றும் சமூக நீதி பற்றிய ஆழமான,தெளிவான ஆணித்தரமான அறிவார்ந்த கட்டுரைகள் போன்ற பொக்கிஷமான காவியங்களை எழுதும்.தமிழறிஞரும். எழுத்தாளருமான என் மரியாதைக்குரிய அறிவுலக ஆசான் அண்ணன் மனுவேந்தன் அவர்களின் சமூகப்பணி மென்மேலும் தொடர்ந்திடவும், ஒலித்திடவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
தீபத்தின் தமிழ் பணி வாழ்க,வளர்க, வாழ்த்துக்கள்
ReplyDelete10வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் தீபத்தின் இலக்கியப்பணியினை மிக்க மகிழ்வுடன் வாழ்த்துகின்றேன்
ReplyDeleteமென்மேலும் வாழ்க வளர்க தீபம் இணைய சஞ்சிகையின் தமிழ்ப் பணி
பல ஆக்கப்பூர்வமான விடயங்களை அழகாக வெளிக்கொணரும் தங்கள் பணி மென்மேலும் பொலிவுபெற்று சிறப்பாக தொடர நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDelete