இவ்வாரம்
சினிமாவில் விமல், விக்ரம் , துருவ் விக்ரம், விஷால் ,நயன்தாரா, (மீண்டும்) மீனா, விஜய் சேதுபதி
ஆகிய நடிகர்களுடன்…
பிசியாக இருக்கும் நடிகர் விமல் கைவசம் இப்போது 10 படங்கள் இருக்கிறது.சற்குணம் இயக்கத்தில் உருவாகி உள்ள எங்க பாட்டன் சொத்து, மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள சண்டக்காரி, தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கன்னிராசி ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் பெயரிடப்படாத படம் ஒன்று, குலசாமி , விடா முயற்சி அத்துடன் விஸ்வரூப வெற்றி என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார்.
தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் ஒளிபரப்பான சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான் தொடரை பிரமாண்ட மூன்று பாகங்கள் கொண்ட சினிமா படமாக தயாரிக்க திட்டமிடப்படுள்ளது.
கதை சர்ச்சையால் கைவிட்ட , நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான பாலாவின் ‘வர்மா’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வருகிற 6-ந்தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியில் வெளிவந்து 3 தேசிய விருதுகளை பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வில்லி வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகினர். வில்லியாக நடிக்க தனக்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதை கொடுக்க பட நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இதில், பார்த்திபன், ராதிகா, சிம்ரன், தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி உள்ளிட்ட ஏரானமானவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிறைவடைந்தநிலையிலும் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. துருவ நட்சத்திரம் படத்திலிருந்து ஒரு மனம் பாடல் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் மீனா. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் மோகன் லாலுடன் மீனா இணைந்து நடித்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
தமிழ் சினிமாவில்
உள்ள முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ
ரணசிங்கம். இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.இப்படம் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட
5 மொழிகளில்
வெளியானது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment