வண்ணத்திரையிலிருந்து சில புதினம்


 👇தொகுப்பு:செமனுவேந்தன் 

லாக்டவுனுக்கு முன்பு தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்தார். அந்த படம் ஓடிடியில் அல்ல நிச்சயமாக தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , அஜித்துக்கு பிடிக்காமல் போனதால், வேண்டாம் என்று கூறிவிட்ட கதையில் சில மாற்றங்கள் செய்து மாஸ்டர் படத்தை, முடித்த பின்  விஜய் நடிப்பதற்கு  தயார் செய்துள்ளாராம்.

 

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்4.

இதில் 16 போட்டியாளர்கள் தொடக்கத்தில் இருந்து பங்கேற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் சம்பள விபரம் வெளியாகி  வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள் யார் என்றால்,

 

❗அறந்தாங்கி நிஷாரியோ

❗ரம்யா பாண்டியன்

❗ஷிவானி நாராயணன்

❗ஜித்தன் ரமேஷ்

 

அதேபோல் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள்:

 

❗வேல்முருகன்

❗சுரேஷ் சக்கரவர்த்தி

❗பாலாஜி

❗சம்யுக்தா

❗சனம் ஷெட்டி

 

மேலும் ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள்:

 

❗கேப்ரில்லா

❗அனிதா

❗ஆஜீத்

❗சோம் சேகர்

வேலை,வெட்டி இல்லாத பார்வையாளர்களுக்கு சமர்ப்பணம்.

No comments:

Post a Comment