இரண்டாம் உலகம்
செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்கா செட்டி இருவரும் இருவேடங்களில் நடித்து 2013 நவம்பர் 22ம் தேதியன்று வெளியான ஒரு திரைப்படம். இப்படத்திற்கு ஹாரிஷ் ஜயராஜ்
இசையமைக்க, பின்னனி இசையை அனிருத் ரவிச்சந்திரன் அமைத்தார்.
கதை
இருவேறு இணை உலகுகளில் நடக்கும் கதையே இரண்டாம் உலகம். நம் பூமிக்கு இணையான வேறொரு உலகில் காதல் அறவே இல்லை. ஆதலால், அங்கே பூக்கள் பூப்பதே இல்லை. இவ்வுலகிற்கு காதல் மீண்டும் வர, பூக்கள் பூக்க ஏங்குகிறாள் அம்மா எனும் மந்திர சக்தி மிகுந்த பெண்.
பூமியில் நடக்கும் கதையில் மது பாலக்ருஷ்ணன்
(ஆர்யா) எனும் இளைஞனை ரம்யா(அனுஷ்கா செட்டி) எனும் பெண் மருத்துவர் காதலிக்கிறார்.
தன்னுடைய காதலை அவள் அவனிடம் சொல்ல, அவன் அதை மறுக்கிறான். பின்பு அவளது பணிகளை கண்டு காதல் கொள்ளும் மது, அவளிடம் தன காதலையும் சொல்கிறான். இதற்குள் தனக்கு நிச்சயம் ஆனதை அவள் சொல்ல, மது விரக்தியடைகிறான். கோவாவிற்கு கல்லூரி சுற்றுலா செல்லும் ரம்யாவை
பின்தொடரும் மது, அங்கே அவளை கவர்கிறார். ரம்யா மதுவின் காதலை
ஒப்புக்கொண்ட அன்றே திடீரென இறந்து விடுகிறார். அந்த அதிர்ச்சியில் இருக்கும்
மதுவை ஓர் நாய் அவள் இறந்த இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. அங்கே மதுவின் ஊனமான
தந்தை அவனிடம் ரம்யாவை தேடி செல்ல சொல்லி மறைந்து விடுகிறார். அக்கணமே தன் தந்தை
இறந்த செய்தியை மது அறிகிறான். சோகத்தில் மூழ்கி நாடோடி போல் வாழும் அவனை, ஓர் ஆளில்லா மகிழுந்து மலை உச்சிக்கு அழைத்து செல்கிறது. அங்கே, அந்த வண்டியை ஓட்ட முயலும் மது படுகாயம் அடைந்து மயக்கத்திற்கு செல்கிறான்.
பூமியின் இணை இன்னொரு உலகில் நடக்கும் நிகழுவுகள் இக்கதையுடன் பிணைந்து நடக்கின்றன. அம்மா எனும் தெய்வத்தை வணங்கும் அந்த இணை உலகில், மறவான் (ஆர்யா) என்ற இளைஞன் , வர்ணா (அனுஷ்கா செட்டி) என்ற பெண்ணை மணம் புரிய எண்ணுகிறான். படைத் தளபதியின் மகனான மறவான் நண்பர்களுடன் குடித்து மகிழ்ச்சியாக திரிகிறான். மற்றும், அவனிடம் தான் எதிர்ப்பார்த்த வீரம் இல்லையென தந்தை வேதனைப்படுகிறார். வர்ணா காளான்களை அறுவடை செய்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் ஓர் வீரப்பெண். அம்மா தெய்வத்தை காக்க வீரர்ப்படை தேர்ச்சி நடக்கும் பொழுது வர்ணா அதில் பங்கேற்க முயல்கிறாள். அவளை கண்ட அரசன் அவளை அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கிறான். வர்ணாவை விடுவிக்க அரசனிடம் கோருகிறான் மறவான். அதற்கு, அரசன் காட்டில் வாழும் சிங்கத்தின் தோலை கேட்கிறான். வீழ்த்த முடியாத அந்த சிங்கத்துடன் போரிட்டு தோலுடன் திரும்பிய மறவானுக்கு, வர்ணாவை அரசக்கட்டளைக்கு இணங்க மணமுடிக்கின்றனர்.
சுதந்திரமாக இருக்க
விரும்பும் வர்ணா அரசரை கொல்ல முயல்கிறாள். ஆதலால், அவளை வனவாசத்திற்கு அனுப்புகின்றனர். இதனால் விரக்தியடைந்து குடிக்கும் மறவான், நண்பர்களின் சவாலை ஏற்று, சுவாமிமலை எனும் ஆபத்தான மலையை
ஏறுகிறான்.இதற்கிடையே இரண்டு உலகையும் இணைக்க முயற்சிக்கும் அம்மா, மலை உச்சியில் இருக்கும் மறவானின் கண்களுக்கு கோவாவில் இருக்கும் மதுவை தெரிய
வைக்கிறாள். மாயவலையின் மூலம் பூமிக்கு வரும் மறவான் மதுவை காப்பற்றிக் கொண்டு
அவன் உலகிற்கே திரும்ப செல்கிறான். மதுவிற்கு சிகிச்சை அளித்து அவனை ஊருக்கு
அறிமுகப் படுத்திகிறாள் அம்மா.
அங்கே ரம்யாவை போல உருவம் கொண்ட வர்ணாவை காணும் மது, அவள் மீது காதல் கொள்கிறான். இதனால் அந்த உலகெங்கிலும் பூக்கள் மலர்கின்றன. இதனிடையே வர்ணாவை வீட்டில் தங்கவைததற்காக மரவானுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது. அம்மாவை எதிரி நாட்டு படைகள் கடத்தவே, அவளை காப்பாற்ற மறவான் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான். ஆனால், எதிரிப்படையிடம் மாட்டிக்கொள்கிறான்.
அம்மா மற்றும் மறவானை காப்பாற்ற மது மற்றும் வர்ணா செல்கின்றனர். தன் உயிரைப் பணயம் வைத்து அம்மாவை காப்பாற்றி , மறவான் ,வர்ணா இருவரையும் இணைத்து உயிரை இழக்கிறான் மது. இத்துடன் படம் நிறைவடைகிறது.
-பார்த்ததில் பிடித்தது.
0 comments:
Post a Comment