அட்ச ரேகைகள் [latitude]
கடகரேகை + பூமத்தியரேகை + மகரரேகை
பூமியில் உள்ள நாடுகளின் அல்லது ஒரு ஊரின் சரியான இடத்தைக் குறிப்பிட்டு கூறவே அட்ச ரேகைகளையும் தீர்க்க ரேகைகளையும் பயன்படுத்துறோம். புவிப் பரப்பின் மீது கிழக்கு மேற்காகச் செல்லும் கற்பனைக் கோடுகளுக்கு அட்ச ரேகைகள் [latitude] என்று பெயர். இரு துருவங்களையும் இணைத்தபடி வரையப்படும் வடக்குத் தெற்காகச் செல்லும் கற்பனைக் கோடுகளுக்குத் தீர்க்க ரேகைகள் [longitude] என்று பெயர்-இவை சர்வதேச நாடுகளுக்கிடையிலான நேர வித்தியாசத்தினை கணித்திடவும் உதவுகிறது.
படம்:01
புவி தன்னைத்தானேஒரு அச்சில் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை முழுவதுமாக சுழன்று வருவது நீங்கள் அறிந்ததே!
பூமி
தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் பொழுது, அதன் ஒரு பகுதி மட்டும் சூரிய
ஒளி படுகிறது. வெளிச்சம் கிடைக்கிற பகுதி பகலாகவும் ,மீதி
இரவாகவும் தோன்றுகிறது. இருட்டான பகுதியில் இருந்து வெளிச்சம் நோக்கி புவியின்
பகுதி மேற்கிலிருந்து கிழக்காக நகர்வது
சூரிய உதயம் என்று சொல்லப்படுகிறது. பகல் பொழுதில் இருந்து இருட்டை நோக்கி நகர்வது
சூரிய அஸ்தமனம் என்று சொல்லப்படுகிறது.
படம்:02
ஆனால்
தினசரி நாம் கிழக்கில் காணும் சூரிய உதயம் , மதியவேளையில் சூரியன் சில நாடுகளில் தலையின் உச்சியிலும் ,சில
நாடுகளில் வடக்காகவும் ,சிலநாடுகளில் தெற்காகவும் தென்படுவது எவ்வாறு?
பூமியும் தன்னைத்தானே சுற்றும்போது 66 1/2 டிகிரி சாய்வான கோணத்தில் சரிந்து சூரியனை சுற்றி வருகிறது. படம்:01 இல் காட்சி படுத்திய படத்தில் குறிப்பிடப்பட்ட கடகரேகையும், மகரரேகையும் , படம்:3 இல் காட்டியவாறு பூமி சரிவு நிலையில் சூரியனைச் சுற்றி வலது புறம் பூமி வரும்பொழுது சூரியனின் உச்சிவெயில் கடகரேகையினையும் , இடதுபுறம் பூமி வரும்பொழுது மகர ரேகையினையும்,இரண்டு ரேகைகளுக்கும் நடுவில் வரும்போது மத்திய ரேகையையும் சூரியன் சந்திக்கும்போது அவ் ரேகைகள் சார்ந்த நாடுகளில் வாழ்வோருக்கு தலையின் உச்சியில் சூரியன் தென்படும்.
அதேவேளை நாம் கூறுவதுபோல் சூரியன் வருடம் முழுவதும் சரி நேர் கிழக்காக உதித்து, சரி நேர் மேற்காக மறைவதும் இல்லை.
மேலுள்ள படத்தில் காட்டியவாறு ,சூரியன் சில மாதங்களில் கிழக்குத்திசையின் சிறிது வடக்கேயும், சிலமாதங்களில் சரியாக கிழக்கு திசையிலும், சிலமாதங்களில் கிழக்கு திசையின் சிறிது தெற்கேயும் தள்ளி உதித்து , அதே சரிவில் மேற்கில் மறைகிறது. மாத அடிப்படையில் மேலே காட்டப்பட்டுள்ள படத்தில், உதாரணமாக ஜூன் 21 இல் ''அ '' வில் உதயமாகும் சூரியன் ''அ1'' இல் மறைகிறது.
கடகரேகையினைத்
தாண்டி சூரியன் வடக்கு நோக்கியோ,அல்லது மகரரேகையினைத் தாண்டி சூரியன் தெற்கு
நோக்கியோ செல்லப்போவதில்லை. எனவே கடக ரேகைக்கு வடக்கில், ஆர்டிக் ரேகையினை அண்டி இருக்கும் நாடுகளில்
வாழ்வோரின் கண்களுக்கு மதியவேளையிலும்
சூரியன் சற்று தெற்காகவே சாய்ந்து
தென்படும். அதேபோலவே மகர ரேகைக்கு தெற்காக உள்ள நாட்டில் அண்டாடிக் ரேகையினை அண்டி வாழ்வோர் கண்களுக்கு மதிய
வேளையிலும் ,சூரியன்
சற்று வடக்காகவே சாய்ந்து தென்படும். இவர்களுக்கு என்றுமே தங்கள் தலையின்
உச்சிக்கு நேரே சூரியன் வரமாட்டாது.
👉செ மனுவேந்தன்
No comments:
Post a Comment