கொரோனா வைரஸ் அலைகள்" / பகுதி 02



"முதல் மற்றும் இரண்டாவது                                   கொரோனா வைரஸ் அலைகள்"

 

கோவிட் 19 இன் முதல் அலை எப்படி பல நாடுகளில் தணிந்தது என்பதை கவனித்தால், எமக்கு ஏன் இரண்டாவது அலை வருகிறது அல்லது சிலநாடுகளில் கூடிக் கொண்டு இருக்கிறது என்பதற்கான காரணிகள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, குளிர் காச்சல் தொற்றை [Influenza pandemics] எடுத்துக் கொண்டால், கால நிலை மாற்றத்தால் [change of seasons], உதாரணமாக, பூகோளம் அதன் கோடையில் வெப்பமடைதலால், தற்காலிகமாக அதில் இருந்து வெற்றி அடையக் கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்ல அந்த வைரஸ் பெரும்பாலான பகுதிகளில், பெரும்பாலான மக்களில் தொற்றி, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒன்றை உடலில் ஏற்படுத்தி இருக்கலாம். ஆகவே, திரும்பவும் தொற்றுதலை, உடல் எதிர்க்கும் வல்லமை இருந்துள்ளது. அதாவது, அந்த மக்கள் கூட்டத்தில், பலர் அந்த குறிப்பிட்ட தொற்றுதலை எதிர்க்கும் தன்மை கொண்டதால் [herd immunity or community immunity or population immunity, or social immunity], மக்களுக்கு மக்கள் தொற்றுதலில் இருந்து வெற்றி அடையக்கூடியதாக இருந்தது.    

 

கொரோனா வைரஸை பொறுத்தவரையில், முன்னோடியில்லாத அளவில், மக்களின் நடமாட்ட  கட்டுப்பாடுகள் விதித்தும் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயப் படுத்தியும் [adopted movement restrictions on an unprecedented scale and social-distancing measures], பரவலின் வீதத்தை  ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அதாவது, நோய்த் தொற்றின் அடிப்படை இனப்பெருக்கம் எண்ணை (அடிப்படை இனப்பெருக்க விகிதம் அல்லது R 0, r சுழியம் எனக் குறிக்கப் படுகிறது), ஒன்றுக்கு கீழ் கொண்டு வந்தார்கள். [நீங்கள் கூடுதலான விபரங் களுக்கு எனது முன்னைய கட்டுரையின் பகுதி 03 ஐ பார்க்கலாம் -  https://www.facebook.com/groups/978753388866632/permalink/3688243154584295/ அல்லது http://www.ttamil.com/2020/06/03.html ]. அப்படி என்றால், எப்படி இந்த தொற்று வைரஸ் மீண்டும் தலை காட்ட தொடங்கி உள்ளது? உதாரணமாக செப்டம்பர் 22, 2020 இல் மட்டும்  உலகு முழுவதும் 196,207 புது கொரோனா வைரஸ் நோயாளர்கள் [new cases reported worldwide] கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் மட்டும் 39,334 ஆகும்.   

 

வைரஸ் தொற்று மீண்டும் கூடுவதற்கு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிக விரைவாக பல நாடுகள் தளர்த்தியது அல்லது முற்றாக நீக்கியது [Lifting containment measures too quickly] ஒரு முதன்மை காரணமாக தென்படுகிறது. என்றாலும் இரண்டாவது அலைக்கு இரு காரணங்கள் இருக்கலாம், குளிர் காச்சலை போல, குளிர்ந்த வானிலை தொடங்குதல் [onset of cool weather] ஒரு காரணமாகவும், அல்லது வைரஸில் ஏற்பட்ட மாற்றம் அதாவது வைரஸின் மரபணு திடீர்மாற்றம் இரண்டாவது காரணமாக இருக்கலாம். என்றாலும் இது வரை வெப்ப காலநிலை, கோவிட் 19 ஐ குறைத்ததற்கான சான்றுகள் பெரிதாக அறியப்படவில்லை [So far, we have not seen evidence that SARS-CoV-2 transmission is slowed by warm weather]. 1918 இன் பிற்பகுதியில், உலக வரலாற்றின் இரண்டாவது குளிர் காச்சல் அலை பரவி பெரும்பாலானோரின் உயிரை காவியது ஞாபகம் இருக்கலாம். அப்படி இது அமையக் கூடாது என்பதே இன்று எல்லோரினதும் கவலையாகும். விஞ்ஞானிகளின் ஆய்வின படி இது அதிகமாக மரபணு திடீர் மாற்றத்தால் ஏற்பட்டதாகும். அதனால், பெரும்பாலோனோரின் உடலில், முதல் அலையின் பொழுது, ஏற்பட்ட  வைரஸ் நோயெதிர்ப்பு அமைப்புகள், இந்த புதிய மாற்றமடைந்த வைரஸை, இரண்டாம் அலையின் போது, அடையாளம் காண முடியாது போனதே ஆகும் [Some researchers believe it was brought about by a mutation that made the virus again unrecognisable to most people’s immune systems]. இவற்றை விட இன்னும் ஒரு காரணமும் உண்டு. அதாவது முதல் அலையில் தம்மை வெளிப்படுத்தாதவர்களில், நோயெதிர்ப்பு அமைப்புகள் ஏற்படாமையே ஆகும். எனவே இவர்கள் இரண்டாவது அலையில் இலகுவாக பாதிக்கப் பட்டார்கள். இதன் அடிப்படையில் நாம் கோவிட் 19 இன் இரண்டாம் அலையை கவனத்தில் எடுத்தால், இங்கும் இன்றும் இவ்வாறு நடைபெறலாம், அது மட்டும் அல்ல, இன்னும் இதற்கு எதிரான தடுப்பூசி முறையாகவும் பெருமளவிலும் கண்டுபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. 

 

உலக சுகாதார அமைப்பு, மக்களின் நடமாட்டத்தில் கொண்டு வந்த முடக்கலை பகுதி பகுதியாக தளர்த்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நிலையிலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை கவனத்தில் கொண்டு, அதிக தளர்த்தலுக்கு பின் போகலாம் என்கிறது [The WHO has recommended lifting movement restrictions in stages to test the effect of each before moving to greater openness]. என்றாலும், வல்லுனர்களின் கருத்தின் படி, எல்லோரையும் முடக்காமல், தொற்றை குறைப்பதற்கு சிறந்த வழி, ஏற்கனவே உள்ள வசதியுடன் மேலதிக வளங்களை சேர்த்து கோவிட் 19 இற்கான பரிசோதனையின் அளவை தேவைக்கு ஏற்ப அதிகரிப்பதும் மற்றும் தொற்றுக்கு ஆளானவரின் முன்னைய தொடர்புகளை தேடிக்கண்டு பிடித்து, அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை கையாளுவதும் என்கிறது [to keeping infections low without locking down everyone is to scale up testing and contact tracing]. எனவே சுகாதார அதிகாரிகள், தொற்றுக்கு உள்ளனவர்களை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாக தனிமை படுத்துவதுடன், அவருடன் அண்மையில் தொடர்பு கொண்டவர்கள் யார் யார் என அடையாளப்படுத்தி, அவர்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பதும் ஆகும் என்கிறார்கள் [Health authorities need to find infected people, isolate them and identify their recent contacts, so they can be tested as well and isolated if necessary]. இவ்வாறு கையாளும் பொழுது, இறுதியில், போதுமான மக்கள் கொரோனா வைரஸுக்கு வெளிப்படுத்தப் பட்டு, அதனால், அந்த மக்கள் குழுக்களுக்கிடையில் ஒரு சமூக நோய் எதிர்ப்பு சக்தி [herd immunity] உண்டாக சாத்தியமாகி, அது பரவுவதை நிறுத்திவிடும் என்கிறார்கள். மேலும் இதற்கு எதிரான தடுப்பூசி உத்தியோக பூர்வமாக விரைவில் கொண்டுவர வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்கள்.

 

2002-2003 ஆண்டில் பரவிய சார்ஸ் வைரஸ் [SARS] தொற்று நோய், கொரோனா வைரஸ் இனம் ஒன்றாலேயே உண்டாகியது என்றாலும், அது  சர்வதேச பரவலாக மாறவில்லை. கோவிட் 19 போல், இது தொற்றும் தன்மை கொண்டதல்ல. மேலும் அதன் பரவல், வைத்தியசாலை மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடற்பாய் திரவங்களுடன் [சளி, தும்மல் போன்றவை] நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய இடங்களுக்குள் முக்கியமாக  கட்டுப்படுத்தப் பட்டு இருந்தன [restricted to hospitals and other settings where people came in close contact with the body fluids of infected patients]. எபோலா வைரஸ் [ebola virus], மனிதர்களுக்கு ஒப்பீட்டளவில் இன்னும் ஒரு புதிய நோய்க் கிருமி. இது ஆப்பிரிக்காவில் அவ்வப்போது எதிர்பாரா பரவல்களை ஏற்படுத்தினாலும் மற்றும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அல்லது சில கட்டுப்பாடுகளில் தொற்றும் தன்மை கொண்டதாக இருந்தாலும் [while the virus is highly contagious in some settings],  கொரோனா வைரஸ் மாதிரி, போதுமான அளவு உலகம் முழுவதும், பரவக்கூடிய தொற்றுநோயாக இருக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

இனி நாம் சில அடிப்படை கேள்விகளை முன்மொழிந்து அதற்கான விடையையும் பார்ப்போம். 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 03 தொடரும்

 


No comments:

Post a Comment