பகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய
கண்ணானால் உரைக்கப்பட்டது.
போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில்
நின்ற அருச்சுனனை தைரியமூட்டிப் போர் புரிய வைக்க, கண்ணனால்
எடுத்துக் கூறப்பட்ட பல நியாயங்களை உள்ளடக்கிய ஒரு போதனை நூலாகும்.
"போர்க்களத்தில் எதிரில் நிற்போர்
எல்லாம் யார், யார்?. எனது
வணக்கத்திற்கு உரிய பெரியோர்கள், குருமார்கள்,
ரிஷிகள்,
ஆசிரியர்கள்,
ஒரே
இரத்த உறவிலான பெற்றோர்கள், சகோதரர்கள்,
பிள்ளைகள்,
ஒன்றாக
விளையாடித் திரிந்தவர்கள், அத்தோடு
எதிரணியில் உள்ள, உனக்கே
(கண்ணபிரானுக்கே) சொந்தமான சேனைகள்!
இவர்களை எல்லாம் கொல்வது மகா பாவம் கண்ணா.
என்னை விட்டுவிடு. எனக்கு அரசும் வேண்டாம், பதவியும்
வேண்டாம். நான் இந்தப் பாவத்தைச் செய்ய விரும்பவில்லை"
இப்படி மறுத்து நிற்கும் அர்ச்சுனனுக்கு கூறப்படுபவை, ஓர்
உயர் அதிகாரியால், சிற்றூழியர்களுக்கு
வழங்கப்படும் கோட்பாடுகளைக் கொண்ட கடுமையான கட்டளைகளாகும். சுயமாய்ச் சிந்திக்காவோ,
மீறிச்
செயல் படவோ உரிமை இல்லை.
"கடமையைச் செய்,
பலனை
எதிர்பாராதே" என்பதுதான் மூல சுலோகம். கேள்வி கேட்காதே,
சொன்னதை
மட்டும் செய்!
ஏனென்றால்,
"அவரவர் குணம் மற்றும் ஈட்டிய கர்மாவின்
பலன்களின்படி நான்கு விதமான சாதி அமைப்பு என்னால் (கடவுளால்)
உருவாக்கப்பட்டது".
"பிராமணர்கள்,
க்ஷத்ரியர்கள்,
வைஷ்யர்கள்,
சூத்திரர்கள்,
என்பன.
ஒவ்வொரு சாதியினருக்கும் அவரவர் கடமைகள் என்று விதிக்கப்பட்டிருக்கின்றன.
அக்கடமைகளைத் தவறாது அவர்கள் செய்து முடிக்க வேண்டியது கட்டாயப்
படுத்தப்பட்டிருக்கிறது. அதை ஒருபோது உங்களால் மாற்றமுடியாது".
"க்ஷத்ரியர்கள் போர் புரியப்
பிறந்தவர்கள். போர் புரிவது உனது கடமை. உயிர்களைக் கொல்வது பாவம் என்று நீ
நினைப்பது வர்ண தர்மம் ஆகாது. மக்களின்
வாழ்க்கை சுருக்கமானது. அவை மரண சுழற்சியிலும் பிறப்பு சுழற்சியிலும் உள்ளன. ஆகவே,
எப்படியும்
அவர்கள் எப்படியாவது இறந்துவிடுவார்கள். கடமையின் ஒரு பகுதியாக நீ மக்களைக்
கொன்றால் பரவாயில்லை. அவர்களின் இறப்புக்கு நீ ஒரு கருவியே ஒழிய அதை நீ
செய்யவில்லை"
இவ்வாறான மனச்சாட்சிக்கு ஒவ்வாத,
நியாயமற்ற,
கொடூரத்தனமான
கொலைகளைச் செய்யுமாறு (கடவுள்) கிருஷ்ணன்,
அருச்சுனனை
மூளைச் சலவை செய்து பயமுறுத்தி அனுப்பி வைக்கிறார்.
இவ்வளவு பேரையும் அநியாயமாகக் கொல்லாது
பிரச்சனையைத் தீர்க்க சுலபமான வழியொன்றும் இந்தக் கடவுளுக்கு தோன்றவில்லையே!
யுத்த முடிவில் சகல எதிர் தரப்பினரும்
கொல்லப்பட்டனர், கிருஷ்ணனின் சேனையில் எல்லோரும் தப்பினர்.
எல்லாப் பெரிசுகளையும்,
உறவுகளையும்
கொன்று குவித்து 'கடமை
வீரனாக' அர்ச்சுனன்
மிளிர்ந்தான்.
இப்படியாக, சில
வினாடிகளுக்குள் யுத்தகளத்தில் வைத்துச் சொல்லப்படட பகவத் கீதைக்கு பொருள் கூறிப்
பிரசங்கங்கள் செய்வோர், ஒரு
மாசம்,இரண்டு மாசங்கள் என்று போதாது,
வருடக்கணக்கில்
தேவைப் படும் என்று சொல்லிக் கொள்வார்கள்.
முடிவில், இந்த
வைணவ நூல், சாதாரண மனிதனுக்கு என்ன சொல்கிறது?:
* மற்ற சில மதங்கள் தங்கள் கடவுளை வணங்காதவனை
மட்டும்தான் கொல்லும்படி கூற, இவர்கள்
ஒரே மதத்தில் உள்ள தம் சுற்றத்தினரையே கொல்லும்படி போதிக்கிறது.
* சொந்த மூளையை பாவிக்காது சொன்னதைச்
செய்யும் அடிமையாய் இரு என்று மட்டம் தட்டுகிறது.
* சாதிக் கொடுமைக்குள் இருந்துகொண்டே இரு,
அதுதான்
தெய்வ கட்டளை என்கிறது.
இந்த மகா நூல், ஒரு
தீவிர வாதத்தையும், அடிமைத்தனத்தையும்,
சாதி
பாகுபாடுகளையும் ஆதரித்துப் போதிக்கும்
ஒரு சாசனம்.
இதில், மனுஷனுக்கு
விளங்காத தத்துவங்கள் பல இருப்பதாக ஆன்மிக வாதிகள் பறை சாற்றிக்கொண்டே
இருப்பார்கள்.
அப்படிச் சொன்னால்தான் அவர்களை நாலு பேர் 'அறிவாளிகள்'
என்று
நினைத்துக் கொள்வார்கள்.
மனிதனுக்கு விளங்காதவை இருந்துதான் என்ன,
தொலைந்து
போனால்தான் என்ன?
மொத்தத்தில், பகவத்கீதை
மனிதனுக்கான ஒரு நீதி நூல் அல்ல! சமய நூலும் அல்ல!
அது ஓர் இருட்சி நூல்.
✍செல்வதுரை,சந்திரகாசன்
கீதை சொல்கிறது,சொல்கிறது என்கிறார்கள் , சொல்லுங்கள் என்றால் முழிக்கிறார்கள் சிலர், அதில் போருக்காக கூறப்பட்ட கருத்துக்களை அப்படியே வாழ்க்கையையும் போராக்கி சமாளிக்கிறார்கள் சிலர் அதாவது உறவுகளுடன் சண்டையிடு என்று, ஆனால் ஒளவையின் , வள்ளுவரின் மிகவும் ஆரோக்கியமான கருத்துக்கள் அடங்கிய ஆரியர் அற்ற நூல்கள் மத நூலாக்கப்படவில்லை
ReplyDeleteகடவுளுகளையும், கடவுளுகள் நூல்களையும், அவைகளை பின் பற்றுபவர்களையும் பயமில்லாமல் சாடுகிறீர்களே, கட்டாயம் கடவுள் உங்களை நரகத்து நெருப்பில்தான் வீசிவிடுவார் என்பது தெரியுமா?
ReplyDelete