நாகப்பட்டினம் (Nagapattinam) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது.
சொற்பிறப்பு
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது, இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்த நாக இனத்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. தொலெமி என்பவர் நாகப்பட்டினத்தை நிகாம் என்று குறிப்பிடுகிறார், மேலும் இது பண்டைய தமிழ்நாட்டின் மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக
இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் "நிகாமா" அல்லது "நிகாம்"
என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள்
இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது. நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும்
போர்த்துகீசியர்களாலும் "கோரமண்டல் நகரம்" என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான அப்பரும், திருநானசம்பந்தரும், தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை
"நாகை" என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் "நாகை"
என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.
வரலாறு
நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக
நகரமாகவே இருந்தது. வடநாட்டினர் தமிழரை 'நாகர்' என்றே அழைத்தனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த
கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. நாகப்பட்டினத்தின் மற்றொரு பெயர் 'நீர்பெயற்று'. காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற
துறைமுகப்பட்டினமாக விளங்கியது. 'பதறிதிட்டு' என்னும் பகுதியில் முன்பு புத்தவிகாரை
இருந்துள்ளது. இவ்விகாரை கி.மு. 265-270 இடைப்பட்ட காலத்தில் கட்டப்பெற்றிருக்கலாம். அசோகர் கல்வெட்டு சோழ, பாண்டிய நாடுகளில் புத்த பள்ளிகளை எழுப்பியதைக்
கூறுகிறது. சினப்பயணி யுவான் சுவாங் (கி.பி. 629-645) தன் பயணக் குறிப்பேட்டில், அசோகர் எழுப்பித்த புத்தப்பள்ளியை நாகப்பட்டினத்தில் தான் கண்டதாகக்
குறித்துள்ளார். புத்த விகாரங்களின் வெளிப்பகுதியில் சீன நாட்டு முறையில்
கோபுரங்கள் இருந்துள்ளன. நரசிம்மவர்மன் காலத்தில் 'புதுவெளிகோபுரம்' ஒன்றை கட்டியுள்ளார். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜயம் மன்னர் சூளாமணிவர்மன் நாகையில் 'சூளாமணி விகாரை'யை அமைத்தான். இந்த பெளத்தபள்ளிக்கு இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும் 'ஆனைமங்கலம்' என்ற ஊரை பள்ளிச்சந்தமாக தானமாக அளித்துள்ளனர். இதைப்பற்றிய செப்பேடு ஹாலந்து
நாட்டில் உள்ள லெய்டனில் இன்றும் உள்ளது. நரசிம்மவர்மன் எழுப்பிய 'புதுவெளிகோபுரம்' 1882 வரை இருந்துள்ளது. பின்னர் கிருத்துவ குருமார்கள் ஆங்கில அரசிற்கு எழுதி இதை
இடித்து விட்டனர். இதன் அடியில் கண்டெடுக்கப்பட்ட 5 புத்தர் சிலைகளும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. நாகப்பட்டினத்தை அடுத்த' 'பரவை' என்ற கடற்துறை சார்ந்த ஊரில் 'நீர்ச்சுழல்' அடிக்கடி ஏற்பட்டு பல கலங்கள் மூழ்கியதற்கான அகச்சான்றுகள் பல கிடைத்துள்ளன.
நாகை மாவட்டம் சோழநாட்டின் கடற்கரையோரப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது.
சோழராட்சியில் 'சோழகுல வல்லிபட்டினம்' என்ற பெயரைப் பெற்றிருந்தது. வணிக துறைமுகபட்டினமாகவே இருந்து வந்துள்ளது.
கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே இங்கு இயற்கை வாயு
வெளிப்பட்டுள்ளது. அக்கால மக்கள் இயற்கைவாயு வெளிப்பட்ட கிணற்றை 'புகையுண்ணிக்கிணறு' என்று அழைத்துள்ளனர். சோழர்களுக்குப் பிறகு
தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நாகையை போர்ச்சக்கீசியருக்கு தாரை
வார்த்தனர். கி.பி. 1500 முதல் 1658 வரை ஆண்டனர். அக்காலத்தில் போர்ச்சுக்கீசியன்
பல மீனவர்களை கொன்றனர். நாகூரில் இருந்து அரங்கநாதர் கோயிலை இடித்தனர்.
போர்ச்சுக்கீசியர்களுடன் சண்டையிட்டு ஆலந்துக்காரர்கள் இப்பகுதியை 1658 முதல் 1824 வரை ஆண்டனர் தஞ்சை மராட்டிய மன்னர் ஏக்கோஜியுடன் உடன் படிக்கை செய்து கொண்டு
குத்தகையாக நாகையை எடுத்தனர். இவர்களுக்குப் பின் நாகை ஆங்கிலேயர் கைக்கு வந்தது.
விடுதலைக்குப்பி தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தஞ்சை மாவட்டத்தில்
இருந்து 1991, அக்டோபர் 18ஆம் நாள் நாகையை தலைநகராகக் கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
தொழில்
இந்நகரின் முக்கிய தொழில் என்பது வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித் தொழில்
ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப்
பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.
இந்நகரில் விவசாயமும் செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள்
மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.
விமான நிலையம்
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
கலாச்சாரம் மற்றும்
சுற்றுலா
நாகப்பட்டினத்தில் நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரை, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் தரங்கம்பாடி ஆகிய நகரங்கள்
சுற்றுலா தளமாக விளங்குகிறது.
காயாரோகணேசுவரர் கோயில் ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிவன்
கோயிலாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும்.
நாகூரில் அமைந்துள்ள தர்காவானது, இசுலாமியர்கள் புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.
வேளாங்கண்ணியில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும்.
நாகப்பட்டினம் அதன் சிறந்த வரலாறு மற்றும்
பண்பாட்டினால் மிகவும் புகழ் பெற்ற நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம், நாட்டிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் ஒன்று. இங்கு
அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். வாருங்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தளங்களை கண்டுகளிக்கலாம்.
நாகப்பட்டினம் அதன் சிறந்த வரலாறு மற்றும்
பண்பாட்டினால் மிகவும் புகழ் பெற்ற நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம், நாட்டிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் ஒன்று. இங்கு
அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். வாருங்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தளங்களை கண்டுகளிக்கலாம்.
நாகப்பட்டினம் அதன் சிறந்த வரலாறு மற்றும் பண்பாட்டினால் மிகவும் புகழ் பெற்ற
நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம், நாட்டிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் ஒன்று. இங்கு
அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். வாருங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தின் அழகிய
சுற்றுலாத் தளங்களை கண்டுகளிக்கலாம்.
குறிப்பு;மாதமொருமுறை ஆரம்பத்தில் உங்கள் ஊரும்
தீபத்தில் வெளிவர எழுதி அனுப்புங்கள் s.manuventhan@hotmail.com
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment