எந்த மாதிரியான பேச்சுக்களை நாம் பேசக்கூடாது


வணக்கம் போட்டோமா, வீட்டில் என்ன எல்லாரும் நலமா என்று கேட்டு நிறுத்தி விட வேண்டும்.
பின்னர் பொது வாழ்க்கைக் கேள்விகளுக்கு சென்று விடலாம். அதுவும் அவருக்குப் பிடித்தால் மட்டும்.
உங்களுடன் ஒருமித்த கருத்து உடையவர் உடன் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால் அது இல்லாத, ஒரு விசயத்தை சீர் தூக்கி பார்க்கும் மன நிலை இல்லாதவர்கள் உடன் என்ன பேசுவீர்கள்?
என் நண்பருக்கு சீமானைப் பிடிக்கிறது. எனக்கு இல்லை. அவர் என்னிடம் அதை பற்றி பேசுவதை விலக்கி விடுவார். அவரல்லவா நண்பர் !
-ரிஷிகேஷ் சிதம்பரநாதன்

⭄தம்பி இப்போ நீ எவ்வளவு சம்பளம் வாங்குற? ( வேலைக்கு செல்லும் ஆண்களிடம், மற்றும் பெண்களிடம் )
இன்னும் ஒரு குட் நியூஸ் சொல்லமாடீங்களா? ( புதிதாக திருமணம் ஆனவர்களிடம், திருமணமாகி சில, பல வருடங்கள் ஆனவர்களிடம் )
நேத்து உங்க வீட்டுல எதோ சண்டையாமே?
உங்களோட முன்னாள் கணவருக்கு /மனைவிக்கு திருமணமாமே?
உங்க மருமகளுக்கு சமைக்க தெரியாதா?
எப்படித்தான் நீங்க அந்த வலியை தாங்கினீங்களோ?
⭄[வைத்திய சாலையில் படுத்திருப்பவரிடம்]என் சொந்த காரர் கூட இதே ஆபரேஷன் செய்தார் பிறகு ஒரு வருடம் கழித்து இறந்து விட்டார்.. !
உங்க குழந்தைக்கு இப்ப பரவா இல்லையா? ( மனநலம் பாதிக்க பட்ட குழந்தைகளின் பெற்றோரிடத்தில் )
வீட்டுக்கு வந்த விருந்தாளிகளிடத்தில் - சாப்பாடு ஆச்சா? (அப்ப உங்க வீட்ல சாப்பிட கூடாதா?, அல்லது, வந்தவங்க "இன்னும் சாப்பிடல, உங்க வீட்ல என்ன இருக்கு " அப்படினு கேட்க போறாங்களா… இல்லை !)
வயிறு கொஞ்சம் உப்புசமாக இருக்கும் பெண்களிடம் (திருமணமான ) நீங்க மாசமா இருகீங்களா?. 
-பத்மா மணிவண்ணன்

[ஊரில் வாழ்பவரிடம்] வெளிநாடு போகவில்லையா?
சொந்தமா வீடு வாங்கவில்லையா?
நீங்க எந்த ஊரு? கதிர்காமத்தம்பியை தெரியுமா? [தெரிஞ்சுதான் என்ன பண்ணிக் கிழிக்கப் போறீங்க?]
[ஒரு புதினத்தினை கூறினால்] யார் சொன்னது?
[மரணவீட்டில் இருந்துகொண்டு] இன்று நல்ல நாளில் சென்றுள்ளாரா என வந்தோருடன் ஆய்வு செய்வது 
இறந்தவர் பழக்கமில்லாதவராயினும் ,இழவு வீடு சென்று , விடுப்புகள் சேகரிக்க விசாரிப்பது.
-செல்லத்துரை , மனுவேந்தன் [www.ttamil.com]
நன்றி:quora

No comments:

Post a Comment