பண்டைய
தமிழர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பது எல்லோரும் அறிந்த
செய்தியே . அந்த வகையில் அவர்கள் அறிவியில் கருவிகள் , மற்றும்
அளக்கும் முறைகள் இல்லாத காலத்திலேயே பெய்யும் மழையை அளக்கும் அறிவைப்
பெற்றிருந்தனர் என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும்
அவர்களுக்கு இந்த அறிவியல் பார்வை இருந்தது என்பதை .
பழந்தமிழரின்
"ஆட்டுக்கல் மழைமானி " என்றால் என்னவென்று தெரியுமா ?
ஆட்டுக்கல்
என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல , அந்த காலத்தில் அதுதான் மழைமானி
. வீட்டு முற்றத்தில் தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும் . முதல் நாள் இரவில்
மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும் . அந்நீரை விரலால்
அளந்து பார்த்து அது ஒரு உழவுக்கு ஏற்ற மழையா அல்லது இரண்டு உழவுக்கு போதுமானதா
என்பதை அறிந்துகொள்வார்கள் .
மழைபொழிவின்
பழைய கணக்கு முறை " செவி " அல்லது " பதினு " எனப்படும் . இது 10
மிமீ அல்லது ஒரு செ மீ இக்கு சமமானது . மழையின் அளவுக்கும் நிலத்தின்
ஈரப்பத்தத்தின் அளவுக்கும் தொடர்பு உண்டு .இதனை "பதினை " என்றனர் .
அறிவியல் கனக்குப் படி 18 மி மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண்
உறிஞ்சும் . ஆக எத்தனை *பதினு* மழை பெய்திருக்கிறது என தெரிந்துகொண்டு முதல்
உழவுக்கு தயாராவார்கள் .
மழைக்கு
அதன் பேய்த்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது .
* தூறல்
* -- பசும்புல் மட்டுமே நனைவது . விரைவில் உலர்ந்துவிடும் .
*சாரல்
-* -- தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்
*மழை
* -- ஓடையில் நேர்பெருக்கு இருக்கும் .
*பெருமழை
* -- நீர்நிலைகள் நிரம்பும் .
*அடைமழை
* --நாள் முழுவதும் அடைத்துப் பெய்யும் தொடர்மழை
*கனமழை
* -- விடாமல் பெருமழையாய் தொடர்ந்து பியது கனத்த பொருட்களையும் அடித்துச் செல்லும்
மழை .
இதையே
அறிவியல் வேறு வகையில் கூறுகிறது ,
மழைத்துளியின்
விட்டம் ௦.5
மி மீ க்கு குறைவாக இருந்தால் அது தூறல்
விட்டம்
௦.5
முதல் 4
மி மீ வரை இருந்தால் அது மழை .
விட்டம்
4 - 6
மி மீ க்கு மேல் இருந்தால் கனமழை ஆகும்
மழையைப்
பற்றி திருவள்ளுவரும் கூட *மாறாநீர் * என குறிப்பிடுகிறார் .
இந்த
உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூட குறையவுமில்லை
கூடவும் இல்லை என்பதை நம் விஞ்ஞானிகள் விஞ்ஞான ஒளியில் தெளிந்து அறிவித்துள்ளனர் .
அதையே உலகில் இதுவரையுள்ள நீர் நிலையானது , அளவு மாறாதது என்கிறார் வள்ளுவர்
.
*கூறாமை
நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர்
வையக்கு அணி -- குறள் 701 .
இங்கு
மாறாநீர் என்பது நீரின் தன்மையை குறிக்கும் எனச் சிலர் தவறான பொருள் கூறுகின்றனர்
. திரு பழ . கோமதிநாயகம் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார் " நிலத்திற்கு
ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவர் பிறிதோர் குறளில் கூறியிருக்கிறார்
"
நிலத்தியல்பால்
நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப
தாகும் அறிவு -- குறள் 452 .
எனவே
மாறாநீர் என வள்ளுவர் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது .
பொதுவாக
5
செ.மீ அளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என் சொல்வது உண்டு . பூமியில் ஒரு ஆதி
அழத்துக்குத் தண்ணீர் இறங்கிருந்தால் அது ஒரு உழவு மழை ஓரிரு முறை நல்ல மழை
பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்திற்கு தண்ணீர் இறங்கியிருக்கும்.
எழுதியவர் : வசிகரன் .க
No comments:
Post a Comment