அவன்: என் பொண்டாட்டிய என்ன தான்
செய்றது?
இவன்:ஏன் என்ன பண்றாங்க?
அவன்:நான் எது செஞ்சாலும் என்
பொண்டாட்டி அதுக்குக் குறுக்கே நிக்கிறா.
இவன்:கார் ஓட்டி பாரேன்.
கோபு: நான் ஆபீசில் நல்ல பெயர்
எடுத்திருப்பதற்கு என் மனைவிதான் காரணம்.
பாபு: எப்படி?
கோபு: வீட்டுக்கு போற டைம் வந்ததும்
என் மேஜை மீதிருக்கும் அவளது போட்டோவை பார்ப்பேன்.. அவ்வளவுதான் அப்படியே
நிறைய வேலை செய்து முடித்து விடுவேன்.
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு
2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம்
அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே
தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி
தெரியாதா?
ஒருவன்:நானும் எங்க அப்பா மாதிரி
டாக்டருக்கு படிக்கலாம்னு நெனச்சேன். ஆனால் முடியாம போயிடுச்சி..
மற்றவன்:உங்க அப்பா டாக்டரா?
ஒருவன்:இல்ல அவரும் டாக்டருக்கு
படிக்கணும்னு ஆசைப்பட்டாரு...
கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட்
வாங்கி வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு
வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல
டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!
தாய்: ஏண்டா, எப்போதும் உனக்கு மருந்தை பாட்டியே
கொடுக்க வேண்டும் என்கிறாய்?
சிறுவன்: பாட்டிக்குத்தான் கை
நடுங்கும். அதனால் பாதி மருந்து கீழேயே போய்விடும்.
ஒருவன்:என்னடா ரொம்ப கவலையா இருக்கே?
மற்றவன்:பின்ன என்னடா?
அந்த பேங்க்ல லட்சக்கணக்கில்
பணம் இருக்கு.. ஆனா அவசரத்திற்கு எடுக்க முடியலையே?
ஒருவன்:ஏன் ஏடிஎம் கார்ட் தொலைஞ்சு போச்சா.. இல்ல செக் புக் இல்லையா?
மற்றவன்:நீ வேற எனக்கு, அந்த பேங்க்ல
அக்கவுண்ட்டே இல்லைடா.
அவன்: கல்யாணமான பெண்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
இவன்: அப்படியா!
அவன்: ஆமாம், தங்கள் கவலைகள் அனைத்தையும்
தான் கணவனிடம் கொடுத்து விடுகிறார்களே!
தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என்
அப்பாவை கேட்டிருந்தால்...
மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ
அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே
புடவைகளைதானே இப்படிவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
தோழி : இரவில் உன் குழந்தை
அழுதால் யார் எழுந்திருப்பார்கள்!
தாய் : கட்டிடத்திலுள்ள
அனைவருமேதான்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment