பொதுவாக உடல் எடையை குறைக்க ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று
வந்தால் நிறைய பேர் கார்டியோ உடற்பயிற்சியைத் தான் மேற்கொள்வார்கள். ஆனால்
எந்தவொரு உடற்பயிற்சியையும் சரியான அளவே மேற்கொள்ள வேண்டும். கொஞ்சம் யோசித்து
பாருங்கள் நடைபயிற்சியையே ரொம்ப தூரம் நடந்தால் என்னவாகும். கண்டிப்பாக அதற்கான
பக்க விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் கார்டியோ உடற்பயிற்சியை
அதிகமாக செய்கிறீர்கள் என்பதை காட்டும் அறிகுறிகள் இதோ.
அதிக உடற்பயிற்சி செய்வது கார்டிசோல் என்ற மன அழுத்த
ஹார்மோனை அதிகரிக்கிறது. இதனால் இரவில் தூக்கம் இல்லாமல் தவிர்ப்பீர்கள். காலையில்
சோர்வாக உணர ஆரம்பிப்பீர்கள். பொதுவாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது ஆரம்பத்தில்
சற்று சோர்வை உணரத்தான் செய்வோம். ஆனால் கார்டியோ அதிகமாக செய்யச் செய்ய உடல்
மிகவும் அதிக களைப்புடனும் சோர்வுடனும் காணப்படும்.
மற்ற உடற்பயிற்சியைப் போலவே கார்டியோ உடற்பயிற்சியும்
உங்களுக்கு காயங்களுக்கு வழி வகுக்கும். பெரிய, சிறிய காயங்கள் என எவை வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே
காயங்கள், தசைப்பிடிப்பு
போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே உங்க உடற்பயிற்சி நிபுணரை சந்தித்து ஆய்வு
பெறுங்கள்.
அதிகப்படியான கார்டியோ உங்க தசைகளின் அடர்த்தியை இழக்கச்
செய்கிறது. இதனால் உடல் மெட்டா பாலிசம் மெதுவாகி எடை இழப்பு சீக்கிரம் நடக்காது.
எடை மெதுவாக குறையும். எடை வேகமாக குறையாது. பார்ப்பதற்கு எடை அப்படியே இருந்த
மாதிரி இருக்கும்.
அதிகப்படியான கார்டியோ செய்யும் போது அடுத்த நாள்
உங்களுக்கு உடம்பு வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதனால் அந்த நாள் உங்களுக்கு
கடினமாக இருக்கும். அன்றாட வேலைகளை செய்யக் கூட சோம்பல் படுவீர்கள்.
அதிகப்படியான கார்டியோ உடற்பயிற்சி செய்யும் போது சில
சமயங்களில் 4-5 நாட்கள் வரைக்
கூட இதயத்துடிப்பு வேகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு அபாயகரமான அறிகுறி
என்று உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது ஏனென்றால் இதயத்தின் தசை ஓய்வெடுப்பதை மறந்து தொடர்ந்து
இயங்கிக் கொண்டே இருக்கிறது.
-படித்ததில் பிடித்தது
0 comments:
Post a Comment