நமக்கு
பிடிச்சாலும் பிடிக்கவில்லையானாலும், நம்ம உடலோட ஒட்டி உறவாடுற
நுண்கிருமிகளில் முதன்மையானது
பாக்டீரியாக்கள்தான். ஏன் எனில் , நம்ம
உடலின் தொடக்கமான தலையில் ஆரம்பித்து
, கால்கள் வரைக்கும் மிகவும் அதிகப்படியான எண்ணிக்கையில், 24 மணி
நேரமும் நமக்கு தெரியாமலேயே நம்முடலுடன் ஒட்டி உறவாடுகின்றன இந்த பாக்டீரியாக்கள்.
நம்புங்கள்.
அதாவது, மனித
உடலுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களில் இரண்டு
வகை உண்டு.
முதலாவது , மனித
உடலிலுள்ள உணவிலிருந்து சத்துக்களை சாப்பிட்டுவிட்டு, மனித
உடலின் ஆரோக்கியத்துக்காக பல ரசாயன மாற்றங்களை செய்யும் “நல்ல பாக்டீரியா“. இவை நம்
எல்லாருடைய குடலிலும் இருக்கின்றன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் Gut microflora என்று பெயர்.
இரண்டாவது வகை, சுற்றுச்சூழலிலிருந்து பல வழிகளில் மனித உடலுக்குள் ஊடுருவி, மனித
உணவின் எச்சங்களை உண்டுவிட்டு, அதே மனித உடலுக்கு குடற்புண் (அதாங்க
அல்சர்!) உள்ளிட்ட பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் குணாதீசியம் கொண்ட “கெட்ட பாக்டீரியா“!
நம்ம
ஒவ்வொருத்தரோட குடலுக்குள்ளேயும் சுமார் 1000 ட்ரில்லியன் பாக்டீரியாக்கள் குடியும் குடித்தனமுமா இருக்குதாம். எல்லாம்
நம்ம கூட்டாளிகள் என்று சொல்ல
முடியாது என்றாலும், அதில் முக்கால்வாசி
பாக்டீரியாக்கள் நமக்கு நல்லதுதான் செய்யுது பாருங்கள்.
உதாரணமாக ,
➧நாம் உண்ணும்
உணவிலிருக்கும் சக்தியை பிரித்தெடுப்பது,
➧நம் உடலை தொற்றுக்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது,
➧குடல் உயிரணுக்களுக்கு போஷாக்குகளை அனுப்புவது,
இப்படி
நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான பல வினைகளைத்தான் செய்கின்றன பெரும்பான்மையான
குடல்வாழ் பாக்டீரியாக்கள். இப்படி நல்லது செய்துகொண்டிருக்கின்ற பாக்டீரியாக்கள, தெரிந்தோ , தெரியாமலோ நாம் தொந்தரவு
செய்திட்டால் , உதாரணமாக நுண்ணுயிர்கொல்லிகளான ஆண்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிட்டால், இம்மருந்துகள்
குடல் பாக்டீரியாக்களைக் கொன்று, குடலுக்குள் ஒரு கலவரமான நிலையை
உருவாக்கிவிடுகின்றன. அதுமட்டுமில்லாம, சூப்பர் கிருமி
என்றழைக்கப்படும் Clostridium difficile எனும்
பாக்டீரியாவினால் உருவாகும், உயிருக்கே ஆபத்தான காலிட்டிஸ் நோய்கூட
தோன்றிவிடக்கூடுமாம். அப்பாடி…..!
குடல்வாழ்
பாக்டீரியாக்களின் சமநிலை, எண்ணிக்கை மற்றும் இயல்பு வாழ்க்கை ஆகியவற்றை பாதிக்கும்
கிருமி தொற்றுகள் மற்றும் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளான ஆண்டிபயாட்டிக்ஸ்
மருந்துகளால், குடல்
தொடர்பான நோய்கள் மட்டுமே ஏற்படும் என்னும் இதுவரையிலான நம்பிக்கை
பொய்யாகிவிட்டது! மாறாக, குடல்வாழ் பாக்டீரியாக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டால், மூளை சம்பந்தமான குறைபாடுகளான பழக்கவழக்க மாற்றங்கள், மனச்சோர்வு
மற்றும் படபடப்பு ஆகியவையும் ஏற்படும் என்பது ஆதாரப்பூர்வமாக
நிரூபிக்கப்பட்டுள்ளது!
அதெல்லாம்
சரி, இந்த
ஆய்வினால நமக்கு வேற என்ன நன்மைகள் இருக்கு?
இருக்குது
என்று சொல்கிறார் , இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் ப்ரிமைல் பெர்சிக். அதாவது, குடல்வாழ்
பாக்டீரியாக்களின் சமநிலை எந்த வகையிலாவது பாதிக்கப்பட்டால், அதை
மீட்டுக்கொண்டுவர சில மருத்துவ வழிமுறைகள் உண்டு. அவற்றுள் ப்ரோபயாட்டிக்ஸ்
என்றழைக்கப்படும், உயிருள்ள பாக்டீரியாக்களை உட்கொள்ளும் முறையும் அடக்கம்.
குடல்வாழ் பாக்டீரியாக்களின் சமநிலை பாதிப்படைவதால் உண்டாகும் மூளை சார்ந்த
குறைபாடுகளை களைய, ப்ரோபயாட்டிக்ஸ் மருத்துவ முறையை கையாள்வது நல்ல முயற்சியாக
இருக்குமா, நல்ல
பலனை தருமா என்னும் கோணங்களில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இந்த ஆய்வு முடிவுகள்
வழிவகுத்துள்ளது என்கிறார் பெர்சிக்.
நன்றி ஹரிநாராயணன்
No comments:
Post a Comment