கொரோனா காரணமாக திரையரங்குகள்
மூடப்பட்ட நிலையில், 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' தொடங்கி, தற்போது சூர்யாவின் 'சூரரைப்
போற்று', விஜய் சேதுபதியின் 'க.பெ.ரணசிங்கம்' போன்ற
பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்
நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகவும், அமேசானுடன்
பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2013-ம்
ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’
என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, அடுத்ததாக
ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படம்
தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்க
இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
🎞🎞🎞🎞🎞🎞🎞🎞🎞
அறிமுக இயக்குநர் ஸ்வாதினி
இயக்கத்தில் நாயகியாக மிகப்பெரும் வரவேற்பு பெற்ற மேகா ஆகாஷ்,
அசோக் செல்வனின் அடுத்த காமெடி
டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார். பெயரிடப்படாத
இப்படத்தை இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர்
ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார்
இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை
மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தொடரான குயினை ஒளிபரப்பத் தடையில்லை என
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2015
ஆம் ஆண்டு அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வேலைகளில்
இறங்கியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இந்த படத்தை மெஹர்
ரமேஷ் இயக்க தமிழில் தயாரித்த ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம்சரணும் தயாரிக்க
உள்ளார். .
இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி மொட்டை அடித்து தனது கெட் அப்பை
மாற்றியுள்ளார். இந்நிலையில்
வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில்
நடிக்கப்போவது சாய்பல்லவிதான். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி
நடிகராக இருக்கும் பிருத்விராஜ் மொழி, வெள்ளித்திரை, ராவணன்
ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். கடைசியாக அவர் நடித்த நேரடி தமிழ்ப்படம் காவியத்தலைவன். அந்த படம் படுதோல்வி அடைந்ததால் அதன் பிறகு
தமிழ் படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் 6
ஆண்டுகளுக்குப்
பிறகு அவர் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் அதற்கான
அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
🎥-தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment