சித்தர் சிவவாக்கியரின்
சிந்தனைகள் பாடல்: 015
தூரம் தூரம் தூரம் என்று
சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
இறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், விண்ணாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! அவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.
*****************************************************
சிவவாக்கியரின் சிந்தனைகள் எண் : :017
வித்தில்லாத சம்பிராதாயம்
மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சிலாது மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்ற தயை விற்றடிம்மை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத பொது சிவனில்லை இல்லை இல்லையே.
தச்சிலாது மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்ற தயை விற்றடிம்மை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத பொது சிவனில்லை இல்லை இல்லையே.
பரம்பொருளே அனைத்துக்கு வித்தாக இருக்கின்றது. அதனாலேயே எல்லா சம்பிரதாயங்களும் மேலுலகிலும், பூலோகத்திலும் அமைந்துள்ளது. அவனின்றி ஓரணுவும் அசையாது. தச்சன் இல்லாது மாளிகை அமையுமா? அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமா? நம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன், மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும் கோயிலாக உடம்பு அமைந்துள்ளது. பெற்ற தாயை மறந்து(விற்று)விட்டு மற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே!! பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே!!! சிவன் இல்லது போனால் அந்த சீவனும் இல்லையே!!! இந்த உடம்பும் இல்லையென ஆகிவிடும் என்பதனை உணர்ந்து அச்சிவனையே நினைத்து தியானம் செய்யுங்கள்.
*****************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை
பாடல் :020
சாம நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சாம நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனை நீர்
அறிகிலீர்
கம நோயை விட்டுநீர் கருத்துளே
உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எண்கள்
ஈசனே
காலம் தவறாது நான்கு வேதங்களையும், சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும், ஒழுங்காகவும், மிக அழகாகவும், நன்றாக ஓதி வந்தாலும் சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள். தன உடம்பில் உயிர் இருப்பதையும், அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள். தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால் நம்மில் ஊமை எழுத்தாகி சூட்சும உடம்பில் இருப்பான் எங்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.7
..அன்புடன் கே எம் தர்மா
No comments:
Post a Comment