உனக்கு ஏற்படும் அவலங்கள்!
பள்ளி, கல்லூரிகளில்
படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும்
காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும்
தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு
ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே
சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட
நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தால் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.
நீங்கள் அதுபோல விஷயம்
தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது
உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின்
ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு
தூண்டப்படுகின்றாள்.
இன்னும் சிலப்பெண்கள் எனக்கு
தாய்,தகப்பனும்
வேண்டாம், அண்ணன்
தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று
சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே
முடியாது. நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி
ஆக்கிரமிக்கபடுகிறாள்.
சில பெண்கள் ,தற்போதைய தொழிநுட்ப வசதிகளுடாக ஏற்கனவே அறியப்படாத புதிய நபர்களால், நம்ப வைக்கப்பட்டு காதல் வலைக்குள் வீழ்த்தப்பட்டு, ஒவ்வொரு பெண்ணும் பலராலும் சீரழிக்கப்படுகின்றமை தினசரி செய்திகளாக ஊடகங்களில் வந்துகொண்டிருந்தாலும், அவற்றை சிந்தியாது, பெண்கள் நம்பி ஏமாறுவது குறைந்தபாடில்லை.
இவள் கொண்டு சென்ற செல்வமும்
இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி
வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி
வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல்
இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.
அல்லது தற்கொலை செய்து தனது
உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன்
தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில்
கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற
பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம்,
உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான
முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக
அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள்
பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும்.பாதிக்க பட்ட பெண்கள் மற்றும்
இனி’வரும் காலங்களில் இது போன்று சில மிருகங்களிடம் தன்னுடைய வாழ்க்கையே துலைத்து
விட கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கமே தவிர ஆண்களை குறை கூறுவதற்கு இல்லை
.காதலில் உண்மையானவர்களையும் நம் கண் முன்னே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் .
பெண்களை போதை பொருளாக நினைத்து அவர்களை பேதைகளா ஆக்க படுவதை தான் வன்மையாக நாம்
கண்டிக்கிறோம்.
-மனுவேந்தன் ,செல்லத்துரை
No comments:
Post a Comment