புதுக் கவி வரியில்…
❌திருத்தம்
எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவை
நல்லவராவதும்,
தீயவராவதும்
நண்பர்கள்
நடத்தையிலே!
❌பெண்
அவள் ஒரு
மலரல்ல
வண்டுகள்
வட்டமிட!
அவள் ஒரு
குயிலல்ல
காகங்கள்
கொத்தியிட!
அவள் ஒரு
மயிலல்ல
தோகையை
தொலைப்பதற்கு!
அவள் ஒரு
மானல்ல
புலிகள்
புசித்திட!
❌வாழ்க்கை
⧭அன்று காதலில்
என் நெஞ்சை
உன்
நினைவுகளாலே
நிரப்பி
உயரப் பறப்பதாக
உணர்ந்தேன்,
⧭இன்று வாழ்வில்
உன் நெஞ்சின்
கனவுகளை
காசினால்
நிரப்பி
கடன் சுமையில்
ஆழப் புதைவதாக
உணர்கிறேன்.
❌விஸ்வரூபம்
மனிதனின்
விஸ்வரூபம்
இன்று
மதத்தில்
மதங்கொண்டு
மடிகிறது.
பணம்
⭄பணத்தைக் கண்டால்
பிணமும் வாய்திறக்கும்
-அது பழமொழி
⭄தொகையை அறிந்தால்
பகையும் புடை சூழும்.
-இது புதுமொழி
காதல்
கல்லூரிக் காலத்தில்
கனிந்த காதலினால்
கரைந்தது
காலங்கள்
மட்டுமல்ல
கல்வியும்தான்.
நன்றியுள்ள மிருகம்
நாய்தான்,ஆனால்
நாய் மாதிரிக்
குலைப்பவனிடம்
நன்றி
நாவிலும்
நனையாது.
மனிதம்
மனிதா!
மதங்களைப் படைத்தாய்
மொழிகளைப் படைத்தாய்
மனிதத்தை மட்டும் ஏன்
மரணிக்கச் செய்தாய்?
செல்லத்துரை,மனுவேந்தன்
0 comments:
Post a Comment