தினமும் ஒரு முட்டை சாப்பிடலாமா?








உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது. ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது.

குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புபவர்களுக்கும் அலுவலகத்து க்கு போகிறவர்களுக்கும் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு.தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும்… நம் உடலுக்கான தேவையான முழு ஆற்றலும் கிடைத்து விடும். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக் கூடியம் ஆகவே தவறாமல் சாப்பிடுங்கள்.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :

நிறையப் பேருக்கு முட்டை சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.முட்டையில் உள்ள சத்துக்களை விரிவாக பார்க்கலாம்.

ஆரோக்கியமான முடி மற்றும் நகம்
தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், நகம் மற்றும் முடியானது ஆரோக்கியமாக இருக்கும்.

வைட்டமின் டி:
இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

கோலைன்:
கோலைனானது செல் மென்படலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. மேலும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உற்பத்தி செய்து, மற்ற செயல்பாடுகளை சீராக செயல்பட மிகவும் இன்றியமையாதது. எதிலும் கிடைக்காத கோலைன் என்னும் இன்றியமையாத சத்தானது முட்டையில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது.

புரதச்சத்து:
முட்டை மிகவும் புரதச்சத்து நிறைந்த உணவு ஆகும். ஒரு முட்டையில், ஆறு கிராம் புரதசத்து உள்ளது.

எடையை பராமரிக்கும்
முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை உடல் எடை அதிகரிப்பதை தடுத்து, எடையைப் பராமரிக்கும்.அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

கண் ஆரோக்கியம்
கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். ஏனெண்றால் முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன்(Lutein) மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருக்கிறது.

ஆரோக்கியமான மூளை
முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும்.

புற்றுநோய்
முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும்.

கர்ப்பிணிபெண்கள் :
வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது ஒரு முட்டையில் உள்ளது. ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் நல்லது.

இதய நோய்
முட்டை நல்ல உணவல்ல என்று பலரும் சாப்பிடுவது இல்லை. இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும் என்று காரணம் சொல்வார்கள். ஆனால் ஆராட்சியாளர்கள் வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்குக்கிறது என கூறுகிறார்கள்.

தீங்கு விளைவிப்பதா?
 நீண்ட நேரத்திற்கு முட்டைகளை அதிக வெப்பத்தில் சமைத்தால், அது ஊட்டச்சத்துக்களை சேதப்படுத்தும். அதிக வெப்பத்தில் முட்டைகளை சமைக்கும்போது, வைட்டமின் ஏ உள்ளடக்கம் 20 சதவிகிதம் குறைகிறது. மேலும் இது முட்டைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் எண்ணிக்கையையும் குறைக்கிறது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பேக்கிங் என்பது முட்டைகளுக்கு ஆரோக்கியமான தேர்வாகாது. ஏனெனில் அதிக வெப்ப செயல்முறை வைட்டமின் டி இன் 60 சதவீதத்தை குறைக்கக்கூடும், மற்ற முறைகளுடன் ஒப்பிடுகையில், இழப்பு 18-20 சதவீதம் மட்டுமே இதில் இருக்கும்.

எத்தனை சாப்பிடலாம்?
நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. முட்டையில் நல்ல கொழுப்புகள் தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.

இதன் அளவு ஒவ்வொருவர் உடலுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும்.

உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.


🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚

0 comments:

Post a Comment