உப்பு:உப்பு அதிகமானால் ஏற்படும் உடற்கோளாறு என்ன என்று கேட்டால், 'உயர் இரத்த அழுத்தம்' என்ற பதிலைத்தான் பெரும்பாலும் நாம் சொல்லுவோம். இதில் சரிபாதிதான் உண்மை. உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டபின், உப்பினைச் சேர்த்துக்கொள்வது அதன் தீவிரத்தை அதிகரிக்கும். எனவே, உங்கள் மருத்துவர் உங்களை உப்பைக்குறைக்கும்படி ஆலோசனை கூறினால், கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்.
ஆனால், சரியான அளவு இரத்த அழுத்தமுடையவர்கள், உப்பினைச் சேர்த்துக்கொள்வதன் காரணமாக அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுவிடும் என மருத்துவ உலகம் கருதவில்லை. இதைப்படித்ததும் மகிழ்ச்சியடைந்துவிட வேண்டாம்.ஏனெனில், உடலில் உப்பு அதிகம் சேர்வதற்கும் மற்றும் பல உடற்கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவை, Stroke எனப்படும் வாதநோய், உடல் பருமன், உடல்/உள்ளுறுப்புக்கள் வீக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழத்தல் மற்றும் எலும்புகள் வலுவிழத்தல் (ஆஸ்டியோபோரோசிஸ் ) ஆகியவற்றிற்குப் பெருமளவில் காரணமான வில்லன், உணவிற்குச் சுவைகூட்டும் கதாநாயகனான உப்புதான்.
உலக அளவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில், வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உப்பினை அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் புகழ் பெற்ற ஆராய்ச்சியான 'INTERSALT Study' யானது உயர் இரத்த அழுத்தத்திற்கும் உப்பிற்கும் உள்ள தொடர்பை நிறுவ இயலவில்லையானாலும், உப்பிற்கும் வாதநோய்க்கும் உள்ள நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறுநீரகச் செயலிழப்பிலும், அதிக உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியப்பங்கு வகிக்கிறது. உடலுக்கு மிக முக்கியத் தேவையான தாதுப்பொருளாகிய கால்சியம் உடலில் உப்பு அதிகம் சேருகையில், சிறுநீருடன் பெருமளவு கலந்து வெளியேற்றப்படுகிறது. இது சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாவதோடு எலும்புகள் வலுவற்றுப் போகவும், எளிதில் எலும்பு முறிவு ஏற்படவும் வழிவகுத்துவிடுகிறது. (கால்சியம்தான், எலும்புகளையும் பற்களையும் வலுவாக வைத்திருக்க முக்கியக் காரணி என்பது நாம் அறிந்ததே!)
உடலில் உப்பு அதிகம் இருப்பது, கால்கள் வீங்குதல், உடலின் உள்பாகங்கள் வீக்கமடைதல், கண்களைச் சுற்றி உப்புதல் இவற்றிற்கும் காரணமாகிறது. இத்தகைய வீக்கம், நமது சீரணத்தை சரிவர நடத்துகின்ற சுரப்பிகளான ஈரல், கணையம் முதலியவற்றிலும், சிறுநீரகத்திலும்கூட ஏற்படக் கூடும்.
உடல் பருமன் என்பது இன்று உலகளாவிய சிக்கலாகக் கருதப்படுகிறது. இதிலும் முக்கியப்பங்காற்றுபவர் திருவாளர் உப்புதான் என்றால் வியப்பாக இருக்கிறதா?
ஆம். உப்பினை அதிகம் சேர்த்துக்கொண்டால், உடலில் நீரின் தேவை அதிகரிக்கிறது. 'உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கணும்..' என்ற சொலவடை நினைவுக்கு வருகிறதா? உண்மைதான். உடலில் உப்பின் அளவு அதிகரிக்கையில், உடல் சேமித்துவைக்கும் நீரின் அளவும் அதிகரிக்கிறது. உப்பைக்குறைத்தால் உடல் எடையும் தன்னால் குறைந்துவிடும். இயற்கை உணவுகள் உண்டால் (சமைக்காத பழங்கள், காய்கறிகள்) எடை இறங்குவது இதனால்தான். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டுவது உப்பைக் குறைப்பதுதான்.
நினைவிருக்கட்டும். இயற்கை எதையுமே சமச்சீராக வைத்திருக்கத்தான் விரும்புகிறது. உடலில் உப்பு, சர்க்கரை இரண்டும் அதிகமாவது ஆபத்தென்றால், மிகவும் குறைவதும் ஆபத்துத்தான். அடிசன் நோய், வயிற்றுப்போக்கு, விபத்தினால் ஏற்படும் இரத்த இழப்பு, சில குடல் தொற்றுநோய்கள் இவற்றிற்கு உப்பினை உணவில் சேர்ப்பது மிகவும் தேவை. இக்கோளாறுகள் உள்ளவர்கள் உப்பினைத் தவிர்த்தால் நிலைமை விபரீதமாகிவிடும்.
உணவில் இலேசாக உப்பைச் சேர்த்துச் சமைப்பதில் தவறில்லைதான். ஆனால், முதலில் குறிப்பிட்டவாறு, பதப்படுத்தப் பட்ட உணவுகள் (உப்பு அதிகமாகச்சேர்க்காவிட்டால் உணவைப் பதப்படுத்த இயலாது), உப்பு தூவிய வறுவல் வகைகள், அதிக மசாலாப்பொருட்கள் சேர்த்த, காரமான உணவுப்பொருட்கள், Bakery Items என்று சொல்லப்படும் Bread,
Bun, Biscuits முதலியவை (குறிப்பாக உப்பு தூவியவை) இவற்றைத் தவிர்ப்பதுடன், தயிர்/மோர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் உண்பது, காய்கறிகளுக்கு மிகுந்த சுவையூட்டக் கருதி அதிக உப்புக்காரமிட்டு எண்ணெயில் வதக்குவது இவற்றைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
குளிர்காலத்தில் புளிப்பு சுவை: கோடைகாலத்தில்
புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள "அக்கலைன் சிட்ரைட்" அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும். அதனால், குளிர் காலத்தில் "கூல் டிரிங்ஸ்" மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட
வைட்டமின்'சி' பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.
⥈⥈⥈⥈⥈⥈⥈⥈⥈
0 comments:
Post a Comment