அறிவியல்


பாம்புப்பு பால் ஊற்றுவது ஏன் தெரியுமா..??

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில்  இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

எறும்பும் - சக்கரையும் இதுவரை தெரியாத ஒரு சுவாரசிய தகவல்.!

குழுவாக இருக்கும் எறும்புக் கூட்டத்தில் மூன்று வகை எறும்புகள் உள்ளன. இராணி எறும்பு, இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள், இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள் என்பனவே அவை. வேலைக்கார எறும்புகளில் சில வேவு பார்க்கும் பணியும் செய்ப
குழுவாக இருக்கும் எறும்புக் கூட்டத்தில் மூன்று வகை எறும்புகள் உள்ளன. இராணி எறும்பு, இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள், இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள் என்பனவே அவை. வேலைக்கார எறும்புகளில் சில வேவு பார்க்கும் பணியும் செய்பவை. இந்த எறும்புகள் அங்குமிங்கும் சிதறி, உணவு தேடிக் கண்டு பிடிக்கும் பணி புரிபவை.
சர்க்கரை போன்ற உணவுப் பொருளைக் கண்டறிந்த எறும்பு உடன் தனது கூட்டிற்குத் திரும்பும். திரும்பும் போது தனது அடி வயிற்றிலிருந்து வாசனைப் பொருள் ஒன்றைத் தொடர்ந்து தரையில் விழச்செய்யும். இவ்வாசனைப் பொருளை நுகரும் பிற எறும்புகள் அவ்வழியே சென்று சர்க்கரை அல்லது உணவுப் பொருட்களைக் கண்டறிந்து கொள்கின்றன.

🐜🐜🐜🐜🐜🐜

பலாப்பழத்தில் உள்ள ஒரு பரம ரகசியம் : ஆச்சரியம் ஆச்சரியம்.!!

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.  "பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே வேறெண்ண வேண்டாஞ் சுளை." - கணக்கதிகாரம்-
சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்-விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

🎋🎋🎋🎋🎋🎋

புற்றுநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை

வண்டை விழுங்குவதனூடக புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை முறையொன்று பேரு நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

 பேரு நாட்டின் தலைநகரமான லிமாவில், ரோஸா எஸ்டினோஸா(60) என்பவரின் மேற்பார்வையில் இவ் சிகிச்சை முறை முன்னெடுக்கப்படுகின்றது.

 ஸ்பானிஷ் பூச்சி என்று அழைக்கப்படும் வண்டை புற்று நோயாளிகள் தினமும் விழுங்க வேண்டும். அந்த வண்டு நோயாளிகளின் வயிற்றில் இறந்த உடன் அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் புற்றுநோயை குணப்படுத்துகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

 இவ் வைத்திய முறையை அறிந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் பேரு நாட்டிற்கு படையெடுப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

💖💖💖💖💖💖

No comments:

Post a Comment