"கருப்பு பூனை குறுக்கே பாய
கருப்பாயி கலங்கி பயணம் நிறுத்த
மருண்டு அருண்டு எலி பதுங்க
வெருண்டு பூனை வெறுக்குது பார்க்குது!"
கருப்பாயி வாசல் கதவு பார்க்க
கருப்பன் வரும் நம்பிக்கை துளிர
நெருப்பு மனது எரியுது தவிக்குது !"
"கருப்பு விழிக்கு விக்கல் வர
கருப்பன் இவள் நினைவோ என
வருடி அழுத்தி நெஞ்சை இளக்க
இருந்த விக்கல் மறையுது போகுது!"
"கருப்பு பல்லி தலையில் விழ
கருப்பாயி நெஞ்சம் பதைத்து துடிக்க
கருப்பன் என்ன ஏதோ என
ஒரு தீபம் காட்டுது முட்டுது!"
"கருப்பு மேகம் இடி முழங்க
கருப்பன் புது கடை திறக்க
கருமம் இன்று வெள்ளி 13
"கருப்பு புகை விளக்கு கக்க
பெருத்த ஆந்தை இரவில் அலற
கருப்பன் பாயில் படுத்து கிடக்க
தருணி நெஞ்சம் துடிக்குது கலங்குது!"
"கருப்பு இருட்டில் சென்ற கருப்பன்
வெருண்டு அலைந்து வீடு திரும்ப
குருட்டு பிசாசு பிடித்ததோ என
திருட்டு வேலணை சொல்லுது கூப்பிடுது!"
"கருத்து அற்ற மூட நம்பிக்கை
அரும்பி உள்ளம் நிரம்பி வழிய
கருப்பாயி படும் பாடு கண்டு
கருப்பன் மனது ஏங்குது சிரிக்குது!"
No comments:
Post a Comment