"ஒருபால் திருமணம்" / பகுதி 03




[நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும்  கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]

நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல் (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman) போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும்.

எனவே தான் என்னை பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை, ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை. ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம். உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது. தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது.உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை. சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக  படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும்.

அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [ bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை
[போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம். ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன், விலங்கு உலகில் ஆவணப்படுத்தப்பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா  ?.

மனித ஓரினச்சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology]. உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.]. அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.]. இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார்.

உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக்   காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு  வெவ்வேறு  பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 04 தொடரும்

0 comments:

Post a Comment