புத்தரிடம் எழுந்த கேள்விகள்

எல்லாம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது பொதுவாக மதவாதிகளின் கருத்தாக இருந்தாலும் ,அது எந்தக் கடவுள் என்று வருகையில் பிரிந்தே நிற்கிறார்கள்.
இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால்தூய்மைதூய்மையற்ற எல்லா பொருள்களும் அவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். அப்படியானால்கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட அனைத்திலும் மாற்றமோஅழிவோ நடந்திருக்கக் கூடாது. துன்பம்இயற்கைப் பேரிடர் ஏதும் நிகழ்ந்திருக்கக் கூடாது. சரிதவறு என்று எதுவும் இருக்க முடியாது.........

ஒரு உயிருக்கு இன்பம்துன்பம்விருப்புவெறுப்பு அனைத்தும் இறைவன் அளித்த  கொடை என்றால்இறைவனுக்கும் அந்த உணர்வுகள் இருந்திருக்கத்தான் வேண்டும். அப்படியானால் அவனை அக் குணங்களற்றவன் என்று எப்படி கூற முடியும்?

கடவுள் மனிதனைப் படைத்தார்எனவே கடவுள் ஆணையை ஏற்பதைத் தவிரஉயிர்களுக்கு வேறு வழியில்லை என்றால்ஒரு மனிதனுக்கு நல்ல குணங்களே வேண்டும். அவை மட்டுமே உயர்வானது என்று ஏன் சிறப்பிக்க வேண்டும்அனைத்தும் அவன் செயல் என்றால் நல்லதுகெட்டது என்பதற் கெல்லாம் இடம் ஏதுஇந்த குணங்கள் அனைத்தும் கடவுளுக்கும் உரியதாக ஆகிவிடு மல்லவா?

துன்பதுயரங்களுக்கு எல்லாம் கடவுள் காரணமில்லை என்று கூறினால்அதற்குக் காரணம் யார்அதற்கெல்லாம் கடவுளைத் தவிர்த்த வேறு காரணங்கள் உண்டு என்றால்கடவுளைத் தவிர்த்துஅவன் சக்திக்கு உட்படாதவைகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கடவுளுக்கே தொடர் பில்லாதவைக்கு, கடவுள் காரணம் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

உலகைப் படைத்தவர் கடவுள் என்றால்அவர் படைத்ததற்கு ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறும்போது கடவுளுக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும். முழுமையான நோக்கம் நிறைவேறாதபோது கடவுள், ‘பூரணத்துவம்’ பெற்றவர் என்று எப்படி கூற முடியும்சரிநோக்கம் ஏதுமின்றியே கடவுள் உலகைப் படைத்தார் என்றால்அந்தக் கடவுள் பைத்தியக்காரனாகவோ அல்லது பால் உறிஞ்சும் பச்சைக் குழந்தையாகவோ தான் இருக்க முடியும்.

அப்படியே படைத்திருந்தாலும் அது ஒரே கடவுளாகத்தானே இருக்க முடியும்ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் எப்படி வந்தன?”

என்று பல கேள்விக் கணைகளால்,மனிதனின்   கடவுள் பற்றிய கூற்றுக்களையே  கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் புத்தர்.
⏳⏳⏳⇔⏳⏳⏳

0 comments:

Post a Comment