முனிவர் எனக்கே சொர்க்கம் காட்டினர்!"



"இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில்
இரவு மெல்லக்  கீழே இறங்க
இனிய விடியலில் நானும் எழும்ப  
இரு வானரம் இறங்கும் நேரம் இது!"

"சிறிய கால்களின் காலடி ஓசை
சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க     
சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி,
சித்தம் குளிர என்னை தழுவுது!"

"கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன்
கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம்
கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை 
கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"  

"சில கிசுகிசு, பின்னர் மௌனம்
சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து
சிறுசதி ஒன்றை திட்டமிடுகிறார்கள்
சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தர"

"படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து
பதுங்கி இரண்டு கதவால் வந்து
பகலோன் நேரே வந்தது போல
பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"

"மடியின் மேல் ஒருவர் எற  
மற்றவர் நாற்காலியின் கையில் எற
மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை
மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"

"முத்தங்களால் என்னை விழுங்கி விட 
முதுகில் ஒருவர் ஏறி கொள்ள 
முழக்கமிட்டு மற்றவர் துள்ளி குதிக்க   
முனிவராய்இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

No comments:

Post a Comment