எமது உடலின்
இயக்கத்திற்குச் சக்தி அவசியம். இச் சக்தி ATP எனப்படுகிறது. எமது உடலில் காணப்படும் ஒவ்வொரு உயிரணுவும்
இவ் ATP ஐத் தொகுக்கும்
ஆற்றல் பெற்றவை. இவ்வாறு எமது உடலின் உயிரணுக்களுக்குள் ATP தொகுக்கப்படும் செயன்முறை 'கலச்சுவாசம்' எனப்படும். கலச்சுவாசம் இடம்பெறுவதற்கு குளுகோசு மற்றும்
ஆக்ஸிஜன் ஆகிய மூலப்பொருட்கள் அவசியமாகும். குளுகோசு எனப்படுவது நாம் உட்கொள்ளும்
மாச்சத்துள்ள உணவுகளிலிருந்து கிடைக்கின்ற எளிய மூலக்கூறாகும்.
.இதே போல், எமது உடல் வளர்ச்சியடைவதற்கும், நாம் அன்றாடம்
இழக்கின்ற பல உயிரணுக்களை மீள வடிவமைப்பதற்கும் அமினோவாமிலங்களும், கொழுப்பமிலங்களும்
அவசியப்படுகின்றன. இவற்றை நாம் உட்கொள்கின்ற புரதச் சத்துள்ள உணவுகளிலிருந்தும், கொழுப்புச்
சத்துள்ள உணவுகளிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு எமது உடலில்
நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்தவும், இன்னும் பல தொழிற்பாடுகளை ஆற்றவும், விட்டமின்களும், கனியுப்புகளும் அவசியப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் உயிர் வாழ
"நீர்" அத்தியாவசியமானதாகும்.
இவ்வாறு நாம்
உட்கொள்ளும் பல்வேறு சிக்கலான உணவுப் பொருட்களிலிருந்தும், எமது உடலுக்குத்
தேவையான மூலப்பொருட்களையும், போசணைக் கூறுகளையும் பெற்றுக் கொடுப்பதெற்கென சிறப்புற
வடிவமைக்கப்பட்டுள்ள தொகுதியே சமிபாட்டுத் தொகுதியாகும். சமிபாட்டுத் தொகுதியின்
பிரதான தொழில்கள்: நாம் உட்கொள்ளும் உணவை அரைத்துச் சிறு கூறுகளாக்குதல், அரைக்கப்பட்ட
உணவை எளிய மூலக்கூறுகளாகச் சமிபாடடையச் செய்தல், சமிபாடடைந்த உணவிலிருந்து தேவைப்படும் போசணை
கூறுகளை அகத்துறிஞ்சுதல் மற்றும் எஞ்சிய உணவு மீதியை மலமாக வெளியேற்றுதல் என்பன
ஆகும். இவற்றிற்கு மேலதிகமாக சமிபாட்டுத் தொகுதியின் சில அங்கங்கள் இன்ன பிற
தொழில்களையும் தனித்தனியே ஆற்றவல்லன.
இனிச் சமிபாட்டுத் தொகுதியின் ஒவ்வொரு அங்கங்களும் என்னென்ன தொழில்களை
ஆற்றுகின்றன எனப் பார்க்க காணொளியில் play யினை அழுத்துக...
🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺
No comments:
Post a Comment