தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்
தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்தினால்
விரைவில் மரணம் ஏற்படும் என அண்மையில் பிரசுரமான ஒரு ஆய்வு கூறுகிறது.
மென்பானத்தில் உள்ள இனிப்பானது சீனியாக
இருந்தால் மட்டும் இந்த ஆபத்து ஏற்படும் என்றில்லை. செயற்கை இனிப்புகளைப்
பயன்படுத்தினாலும் அதே போல மரணம் ஏற்படுமாம்.
4,52,000
பேரைக் கொண்ட இந்த ஆய்வானது டென்மார்க், பிரான்ஸ்,
ஜேர்மனி,நோர்வேஈ
இங்கிலாந்து, சுவீடன், ஸ்பெயின்,
நெதர்லன்ட,
கிறீஸ்
ஆகிய நாடுகளில் செய்யப்பட்டது.
மாதம் ஒரு முறை மட்டும் மென்பானம்
அருந்துபவர்களோடு தினமும் இரண்டு கிளாஸ் இருந்துபவர்களை ஒப்பட்டுப் பார்த்தபோதே
இந்து ஆபத்து இருப்பது தெரிய வந்தது. அந்த மரணமானது பல்வேறு நோய்களால்
வந்திருந்தது.
தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம்
அருந்துபவர்களது மரணமானது பெரும்பாலும் இரத்தக் குழாய் சாரந்த நோய்களால்
ஏற்பட்டிருந்தது. மாரடைப்பு மற்றும் முளையில் இரத்தக் குழாய் வெடித்தல் போன்றவை
உதாரணங்களாகும்.
மாறாக தினமும் ஒரு கிளாஸ் மென்பானம் மட்டும்
அருந்துபவர்களது மரணமானது பெரும்பாலும் உணவுக் கால்வாய் சார்ந்த நோய்களால் ஏற்பட்டிருந்தததாக
அந்த ஆய்வு மேலும் சொல்கிறது.
மென்பானங்களில் உள்ள எந்தப் பொருள் காரணமாக
இருக்கிறது என்றோ, என்ன
காரணத்தால் அவ்வாறு மரணம் விரைகிறதோ என்பவையிட்டு அந்த ஆய்வு எதையும்
கண்டறியவில்லை.
எனவே இந்த ஆய்வானது மென்பானம்
அருந்துவதற்கும் முன்கூட்டிய மரணத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை எடுத்துக் காட்டி ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை
கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது எனக் கொள்ளலாம்.
எனவே மென்பானங்களைத் தவிருங்கள். தண்ணீரை
அருந்துங்கள். வாழ்வு நீளும்.
இந்த ஆய்வானது Jama
Internal Medicine மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.
Dr.Muruganandan M.K.
No comments:
Post a Comment