திரையிலிருந்து துளிகள்


Tamil Movies Shot



விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா. இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது.  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார்.
 📢
தலைநகரம் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும்  சுந்தர் சி நாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்க உள்ளார். இவர் தற்போது அமீரின் நாற்காலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் தலைநகரம் 2-ம் பாகத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
 📢
சுமார் 8 ஆயிரம் பாடல்கள் பாடி , 85 படங்களில் நடித்துள்ள, மலேசியா வாசுதேவன் வாழ்க்கை வரலாற்றை, அவரது மகனும் நடிகருமான யுகேந்திரன், சினிமா படமாக எடுக்கபோவதாக அறிவித்து உள்ளார். மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
 📢
விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் முதல் படம். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சாந்தனு, அழகம் பெருமாள் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
📢
ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்திசுரேஷின் ‘பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘காக்டெய்ல்’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூலை 10ஆம் தேதி ஜீடிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 📢
மிக வயதானவர்களையே கொரோனா அதிகம் தாக்கும் என்ற நிலையில்தமிழகத்தில் ஒருவர் கூட கொரோன தொற்று நோயாளி யாக இல்லை என்ற செய்தி வந்த பின் தான் நடிப்பதாக ரஜினி கூறியதாகவும் அதே முடிவை அஜித்தும் எடுத்துள்ளதாக தக்வல்கள் வெளியாகின.
இவர்களுக்கு ஆதரவாக தற்போது நடிகர் சூர்யாவும் இதே முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. சூர்யாவின் 'அருவா' பட படப்பிடிப்புகளை அடுத்தவருடத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

🎬🎬🎬🎬

No comments:

Post a Comment