அவை என்னுடையதல்ல..

புத்தர் தன் பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார்.
அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மத போதகர்கள்.புத்தரையும் , அவருடைய போதனைகளையும் வெறுப்பவர்கள். எனவே ஆனந்தா என்ற அவருடைய பிரதான சீடர் 'அந்த வழியாக செல்ல வேண்டாம்' என்றார்.
ஆனால் புத்தர் அதை மறுத்து அந்த வழியாக சென்றார்.
அவர் ஊருக்குள் நுழைந்ததுமே அந்த மதவாதிகள் அவரை சூழ்ந்து கொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித
சலனமும் இன்றி அந்த இடத்தை விட்டுச் சென்றார்.அந்த ஊரைக் கடந்ததும் இளைப்பாற ஓரிடத்தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க
முடியவில்லை “குருவே ! அவர்கள் உங்களை எந்த அளவு கேவலமாக பேசி விட்டனர், நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம், குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து ஏதாவது சொல்லி விட்டு வந்திருக்கலாமே”என்றார்.
புத்தர் அமைதியாக தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி
ஆனந்தா! இது யாருடையது?” என்றுகேட்டார்.
இது உங்களுடையது”
இல்லை இது உன்னுடையது ,இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்” என்றார். சிறிது நேரம் சென்றதும் மீண்டும்”ஆனந்தா!இது யாருடையது ?” என்று கேட்டார்.
இது என்னுடையது சுவாமி!”
எப்படி ? இது என்னுடையது என்று சொன்னாயே?”
சுவாமி! இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள்.நான் அதை ஏற்றுக் கொண்டதால் இது என்னுடையதாயிற்று”என்றார்.
ஆம் , நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால் அது உன்னுடையதாயிற்று , அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவே அவை என்னுடையதல்ல”என்றார்.

ஆமாம், அடுத்தவர் கருத்துக்களுக்காக நாம் எமது பயணத்தினை நிறுத்தவேண்டிய அவசியமில்லை.
உன்னை ஒருவன் பழித்துப் பேசுவானேனெனில் அவனது கருத்துக்களை நீ செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை.


2 comments:

  1. குறை ௯றி எசுவோர் மத்தியில் அமர்ந்திருந்த சுவாமி விவேகானந்தரிடம் உங்கள் அமைதிக்கு காரணம் என்னவென ஒரு பக்தன் கேட்டானாம்.அவர் அமைதியுடன்
    'ஒருகாட்டில் நடந்து செல்லும் யானையை பார்த்து ஓநாய்கள் குரைத்தாலும் யானை அவற்றினைக் கண்டுகொள்வதில்லை' என்று ௯றினாராம்

    ReplyDelete
  2. சிவாஸ்Thursday, November 14, 2013

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும். நாம் செல்லும் வழி நேர் வழியாகட்டும்.-கவிஞர் கண்ணதாசன்

    ReplyDelete