'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்'




"ஒட்டாவா நகரில் காலை பொழுதில்
கேட்காத இனிமை காதில் ஒலித்தது
வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது
மொட்டு விரிந்து வாசனை தந்தது"

"சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி
பாட்டன் கையை மெல்ல பிடித்து
வட்ட மிட்டு துள்ளி குதித்து
முட்டி மோதி இன்பம் பொழிந்தது"

"மெட்டி ஒலி காற்றோடு கலக்க
பாட்டு படித்து இனிமை காட்டும்
குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து
எட்டு திக்கும் துள்ளி குதித்தேன்"

"சொட்டு சொட்டாய் விழும் மழையில்
பட்டும் படாமலும் நனைந்து விளையாடி 
நீட்டி நிமிர்ந்து வாங்கில் படுத்து 
லூட்டி அடித்து சிரித்து மகிழ்ந்தோம்"

"ஒட்டி உறவாடும் அன்பு மழலைக்கு  
வெட்டி பேச்சு பட்டாம் பூச்சிக்கு
மொட்டாய், மலரா குட்டி பெண்ணுக்கு 
நட்சத்திரம் சிமிட்ட நானும் போற்றினேன்"

"கட்டி அனைத்து முத்தம் கொடுத்து
தட்டி கொடுத்து உற்சாகப் படுத்தி
ஒட்டி உடை அழகு தேவதைக்கு
பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comment:

  1. MANUVENTHAN SELLATHURAITuesday, June 30, 2020

    மழலைகளின் புன்னகையில் பிறந்ததோ இல்லை,துடிப்பினில் மலர்ந்தது இல்லை, அனைத்தும் இணைந்து உருவானதோ அத்தனையும் சிறப்பு.நன்று.

    ReplyDelete