Spleen
மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால்
தான் மனி தன் நோயின்றி வாழ முடியும். இந்த உறுப்புகளில் மனித இயக்கத்திற்கு பிர
தானமான சில உறுப்புகள் உள்ளன. அவற்றில் மண்ணீரலும் ஒன்று.
மண்ணீரலானது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில்
மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது ரெட்டிக்குலர் செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மண்ணீரலின் பணிகள்
மண்ணீரல் உடலுக்கு உற்சாகத்தைக்
கொடுக்கக்கூடியது.
மூளையின் செயல்பாடுகளையும், நரம்புகளின் தூண்டுதலையும் சீராக்குகிறது.
எண்ணங்களையும் செயல்களையும், உரு வாக்குவதும், ஊக்குவிப்பதும் மண்ணீரல்தான். முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிக்கும் செயலே
மண்ணீரலுக்கு முக்கிய வேலையாகும்.
இரத்த சிவப்ப ணுக்களின் செயல்பாடுகளை சீர்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் மண்ணீரலின் முக் கிய பணியாகும்.
மண்ணீரல் பாதித்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும். சில சமயங்களில்
உயர் இரத்த அழுத்தத்தைக் கொடுத்து மாரடைப்பைக்கூட (Heart attack) ஏற்படுத்துகிறது. நுரையீரலின் செயல்பாடுகளிலும் மண்ணீரலுக்கு பங்குண்டு.
இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல்பாடுகளை
தூண்டுகிறது. அதுபோல் இரத்த ஓட்டப்பாதையில் கிருமிகள் போன்ற வெளிப் பொருட்களை வடிகட்டி
வெளியேற்றும் உறுப்பாகவும் மண்ணீரல் செயல் படுகிறது.
இரத்தம் வழியாக வரும் நோய்க்கு எதிரான தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை
முடுக்கி விடுவதே மண்ணீரலின் முக்கிய பணியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கிறது. வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது. மன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மண்ணீரல் பாதிப்பால் ஏற்படும்
அறிகுறிகள்
⥁உடம்பின் எடை அதிகரித்தல்,
⥁அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல்,
⥁நாக்கு வறண்டு விறைப்புத் தன்மையடைதல்,
⥁வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல்
⥁வாந்தி, உடல் பலவீனமடைதல்,
⥁உடல் பாரமாக தெரிதல்,
⥁கால் பகுதிகளில் வீக்கம், வலி,
⥁சாப்பிட்டவுடன் தூக்கம்,
⥁எப்போதும் சோர்வு,
⥁இடுப்பு பக்கவாட்டு மடிப்பு களுடன் சதை உண்டாதல்,
⥁மஞ்சள் காமாலை ஏற்படுதல்,
⥁இரத்த அழுத்தம் அதிகரித்தல்,
⥁சிறுநீர் சரியாக பிரியாதிருத்தல்.
மண்ணீரல் பாதிப்பு ஏற்படக்
காரணம்:
😠· மன அழுத்தம்,கோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோர்க்கு மண்ணீரல் பாதி
ப்படையும்.
😠· மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்ற வற்றாலும் இந் நோய் ஏற்படும் வாய்ப்புகள்
அதிகம்.
😠· கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதா வது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல்
பாதிப்படையும்.
😠· இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு காரணமாக
மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.
😠· இதயத்திற்கு இரத்தம் செல்வதுபோல் மண்ணீரலும்
இரத் தத்தை உள்வாங்குகிறது.
😠· கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவைகளால் மண்ணீரல்
பாதிக்கப்படலாம்.
மண்ணீரலைப் பலப்படுத்தும்
உணவுகள்:
கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்காயம். கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ். இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த
சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக்கத்திற்கும்
முக்கிய பங்காற்றுகிறது.
👫உடலைக் காப்போம் உபத்திரவங்களை உதிர்ப்போம்👫
No comments:
Post a Comment