அவள் பறந்து போனாளே....




ஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும்
                மெனை மறந்தென்ன கற்றனையோ!
பேருக்கு வாழவாவெனைப்  பெற்றவளும்
                பேணி வளர்த்தெனை முறை தந்தாள்?

ஆருக்காய் வாழப் புறப்பட்டாய்?  நீயும்
               ஆக்கினை வலையினுள் வீழ்ந்துவிட்டாய்
பாருக்குள்  பங்கம் படைத்துவிட்டாய் பாரு
               துயரினைத் தேடி நீஅடைந்துவிட்டாய்!


கூறுகெட்ட மாந்தரின் தீங்குரலில் காயும்
              குளிரென்று  மாள்வேள்வியில் மாய்வதா?
சேறுகொண்டு தன்கரத்தால் யாருவாழ்வை
              சகதியாக்கிட வீணில் சச்சரவு செய்வார்?


நெஞ்சம் இலாதோர் வஞ்சகர் நெருப்பிலே
              நீறாக முன் உன்வாழ்வு மீளமலர்ந்திடவே 
தஞ்சம்  அடைந்திடுவாயென் சேயாயுனை 
              மஞ்சத்தில் தாலாட்டி மகிழ வந்திடுவாய்! 


✍செ.மனுவேந்தன் 










No comments:

Post a Comment