சங்க காலத்தில் வேத நெறியும் கடவுள் நம்பிக்கையும்
கால்கொள்ள ஆரம்பித்தன. இருந்தும் அமைப்பு முறையாக நிறுவப்பட்ட (established) சமயம்
இருக்கவில்லை.சங்கம் மருவிய காப்பிய காலத்தில் தமிழர்கள் வைதீக, சமண, பவுத்த மதத்தை தழுவி
இருந்தார்கள்.
பக்திஇயக்க காலத்தில் ஆரியரின் வேதநெறி சங்க கால தலைவன்
தலைவி உறவையும் நடுகல் வணக்கத்தையும் உள்வாங்கிக் கொண்டு சமண பவுத்த மதச்
செல்வாக்கை சாய்த்தன.
துரதிஷ்டவசமாக
.இந்த தமிழரின் சமயத்திற்கு ,சமஸ்கிரத வேத சமயம் ,தங்களது வேதம் புராணம் இதிகாசம் ஆகியவற்றை ,தமிழரின் சமயம் போல்
கொடுத்து விட்டனர் .இது இரண்டு சமயத்தையும்
ஒன்று இணைத்தது [ஒன்றிப்பு] மூலம் முடிவாயிற்று .முருகன்U+2192.svgஸ்கந்த ,கார்த்திகேய ஆனார்
.சிவாவிற்கு மகன் ஆனார் .அதுபோலவே கொற்றவை உமா ஆனார் .சிவாவின் மனைவியாகவும்
முருகனின் தாய்யாகவும் .மயோன் விஸ்ணு
ஆனார் .இப்படியே மற்றவையும் .
பல்லவர் ஆட்சிக் காலத்தில்தான் சைவசமயம் அப்பர், ஆளுடைப் பிள்ளையார், சுந்தரர், மாணிக்வாசகர்
தலைமையில் பக்தி இயக்கமாக எழுச்சி பெற்றது. இதுவே சைவ சமயத்தின் பொற்காலம் என்று
சொல்லலாம்.
'நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோ மல்லோம்.'
'அஞ்சுவதுமில்லை யஞ்சவருவது மில்லை'
என்ற அப்பரின் வீர முழக்கங்கள் மக்களுக்கு சங்ககால புற
வாழ்க்கையை நினைவூட்ட உதவின போலும்.
பிற்கால பல்லவர் சேர சோழ பாண்டியர் ஆட்சியில் சைவமும்
வைஷ்ணவமும் வளர்ச்சியடைந்தன. அதே சமயம் சாதிப்பாகுபாடும் கூர்மை அடைந்தன.
சைவ சமயத்தின் முக்கிய நூலக பெரிய புராணம் இருக்கிறது.இது
தென் இந்தியாவில் வாழ்ந்த 63 நாயன்மார்களின்/திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய இலக்கியம் ஆகும்.மாணிக்கவாசகரின்
தெய்வீக பாடல்களே தலை சிறந்ததாக விளங்குகிறது.அது போலவே வைஷ்ணவ பக்தி இயக்கத்தில் 12 ஆழ்வார்களின்
பாடல்கள் முதன்மை பெறுகின்றன.பக்தி காலத்தின் தொடக்கத்தில் இருந்து ஆலய வழி பாடு
முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .கோவில்கள்
நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களாகிய பறையை குடைந்தும் கற்களாலும் எட்டாம்
நுற்றாண்டில் இருந்து தோன்றத் தொடங்கின .
இன்று இந்து
மதத்தின் உட்பிரிவான சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது.
இருந்தும் பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில்
அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும்
இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது
மெய்கண்டார் எழுதிய சிவஞான போதத்துடன் சேர்த்து பல
ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாக,1200-1800 AD.காலப்பகுதியில்
வெளிவர தொடங்கின.சைவ சித்தாந்தம்,ஒரு தென் இந்திய சமயமாக ,தமிழர்களுக்கிடையில் மட்டும் காணப்படுகிறது. இந்த ஒழுங்கு முறைப்பட்ட 14 நூல்களை தவிர ,வேறு பல துணை நூல்களும் விளக்கவுரைகளும் தமிழில் உள்ளன. சைவ
சித்தாந்தம் ஆகமங்களை,சிறப்பு படி நிலை
யிலும் வேதங்களை பொது படி நிலை யிலும்
வைத்து,அவைகளின்
அடிப்படையில் தத்துவத்தை விளக்குகிறது
.இப்படி ஆகமத்திற்கு கொடுத்த முக்கியம் ,சைவ மதத்தை இந்து
சமயத்தில் இருந்து ஒரு தனித்தன்மையாக
காட்டுகிறது.சைவ சித்தாந்தம் ,தனது அடிப்படை கட்டுக்கோப்பை ,தனது புனித நூலான
பன்னிரு திருமுறையில் இருந்தே எடுக்கிறது.
மேலும் இந்த நவீன உலகில் ,தமிழர்களின் பண்பாட்டு கருத்துருவமாக திருக்குறளும் ,தமிழர்களின் பொன் காலத்து
உயர்வான .இலக்கியமாக சங்க இலக்கியமும் இன்னும் கருதப்படுகிறது.
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்].
.......................................முடிவு...
No comments:
Post a Comment