🎞🎞🎞🎞🎞🎞🎞புதிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில்
ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில்
வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
🎞🎞🎞🎞🎞🎞எதிர்ப்புகள் அர்த்தமற்றவை
மாறிவரும்
தொழிநுட்ப உலகில்
பழையன பாவனையிலிருந்து ஒதுங்குவதும் ,புதியன பாவனைக்கு வருவதும் கண்முன்னே நாம் கண்டுவரும் நிலையில், அமாசோன் ஓடிடி
பிளாட்பாரத்தில் புதிய
திரைப்படங்களை வெளியிடுவது குறித்து திரையரங்கு
உரிமையாளர்களின் எதிர்ப்பு அர்த்தமற்றவை எனவும் ,நீண்ட நாட்களின் பின் புதிய திரைப்படங்களின் வரவு குறித்த
மகிழ்ச்சியையும் இரசிகர்கள் தங்கள் கருத்துக்கள்
மூலம் சமூக
ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
🎞🎞🎞🎞🎞🎞🎞🎞 இந்தியன் 2 படம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா மற்றும் நெடுமுடி
வேணு உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. லாக்டவுன்
காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
🎞இந்தி நடிகை பாக்யஸ்ரீயும் ‘தலைவி’ படத்தில்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா
வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில்
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில்
அரவிந்த்சாமி நடிக்கிறார். விஜய் டைரக்டு செய்கிறார். கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி தோற்றங்கள்
ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீயும்
‘தலைவி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கங்கனா அறிவித்து
உள்ளார். இவர் இந்தியில் சல்மான்கானுடன் ‘மைனே பியார் கியா’ படத்தில் கதாநாயகியாக
நடித்து பிரபலமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. தெலுங்கு, கன்னட படங்களிலும்
நடித்துள்ளார். தற்போது ‘தலைவி’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
🎞🎞🎞🎞🎞அரவிந்த் சாமி வில்லனாக
பல படங்களில் ஹீரோவாக
நடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் அரவிந்த் சாமி. நீண்ட
இடைவெளிக்கு பிறகு கடல் , தனி
ஒருவன் படத்தில் நடித்தார். தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில்
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் உருவாகும் ஒரு
படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளார். ஊரடங்குக்கு
பின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
🎞🎞🎞🎞🎞சின்னத்திரை படப்பிடிப்பு
சின்னத்திரை படப்பிடிப்புகளை
அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், இதற்கான அனுமதியை வழங்கக்
கோரியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்ததாகவும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க
நிர்வாகிகுஷ்பூ தெரிவித்தார்.
🎞🎞🎞🎞🎞🎞🎞‘மேதாவி’
ஜீவா நடிக்கும் அடுத்த படம்
பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வந்துள்ளது. பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகத் திறமைகள்
கொண்ட பா.விஜய் தான் இந்த படத்தினை இயக்குகிறார். ‘மேதாவி’ என இந்த படத்திற்க்கு பெயர்
சூட்டியுள்ளனர். நடிகர் அர்ஜுன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜீவாவுக்கு
ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.
🎞🎞🎞🎞🎞இன்னும் 7 திரைப்படங்கள்
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 7 பிரம்மாண்ட திரைப்படங்கள், 1. சூரரை போற்று { official } ,2. அருவா { official } ,3. வாடிவாசல் { official } , 4. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு
படம். {
unoffcial } , 5. பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம். { unoffcial }, 6. இரும்பு கை மாயாவி - லோகேஷ்
கனகராஜ் படம் = {
unoffcial } , 7. இயக்குனர் கௌதம் மேனனுடன் ஒரு படம். { unoffcial } ஆகியன
திரைக்காகக் காத்திருக்கின்றன.
🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶
No comments:
Post a Comment