சுவீடன் (Sweden)
சுவீடன் (Sweden) ஐரோப்பாவின்
ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நோர்வேயும் இதன் அண்டை
நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய
நாடு.
தற்காலப்பெயரான சுவீடன், பழைய
ஆங்கில வழக்குச் சொல்லான சுவேத மக்கள் எனும் பொருள் கொண்ட சுவியோபியோட் என்ப திலிருந்து உருவானது.
17ஆம் நூற்றாண்டின் மத்தியில், நாட்டின்
மாகாணங்களை விரிவாக்கி சுவீத பேரரசு உருவாக்கப்பட்டது. உருவாகிய சில ஆண்டுகளில், ஐரேப்பாவின்
மிகப்பெரும் சக்தியாக உருவானது. பெரும்பாலான மாகாணங்கள் 18 மற்றும்
19 ஆம்
நூற்றாண்டுகளில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்திலிருந்து சுவீடனால் கைப்பற்றப்பட்டது.
தனது கிழக்கு மாகாணமான பின்லாந்தை இரசியப் பேரரசிடம் 1809ம்
ஆண்டு இழந்தது. 1814 ஆண்டில் நிகழ்ந்த தனது நேரடிப் போருக்குப்
பின்னர், அமைதியை
கடைபிடிக்கின்றது. சனவரி 1, 1995 நாள் முதல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்
மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினராக உள்ளது.
ஸ்வீடன் லான் என்று
அழைக்கப்படும் 21
மாவட்டங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் - தெற்கில்
ஐரோப்பாவையும்,
நீண்ட
கடற்பரப்பு கொண்ட கிழக்கில் பால்திக் கடலையும், மேற்கில் ஸ்காண்டிநேவிய
தீபகற்பத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள ஸ்காண்டிநேவிய மலைத்தொடரானது, சுவீடனையும்
நோர்வேயையும் பிரிக்கின்றது. பின்லாந்தானது, நாட்டின் வடகிழக்கு எல்லையாக
அமைந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, போலாந்து, இரசியா, லுதியானா, லாத்வியா, எஸ்தானியா
ஆகிய நாடுகள்,
சுவீடனின்
அண்டை நாடுகளாகும். ஒரிசன்ட் பாலத்தின் மூலம், டென்மார்க்குடன் இணைந்துள்ளது.
ஐரோப்பாவின் மிக நீண்ட எல்லையை சுவீடன் கொண்டுள்ளது.
அரசியலமைப்பு முடியாட்சியான
சுவீடனின் காரல் 16ம் மன்னர் குஸ்தாப் தலைவராக உள்ளார். ஆனால், அதிகாரத்தை
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பிரதிநிதித்துவம் வரையில் வரையறுக்கப்பட்டது. பொருளாதார
புலனாய்வு பிரிவின்படி, 167 ஜனநாயக நாடுகளுடன் மதிப்பிடும் 2010
ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் ஸ்வீடன் உள்ளது.
சுவீடன் நாட்டின்
பாராளுமன்றத்தின் பெயர் - ரிஸ்க்ஸ்டேக். 349 உறுப்பினர்களைக் கொண்ட இந்த
அவையே, நாட்டின்
பிரதமரை தேர்வு செய்கின்றது. பாராளுமன்றத் தேர்தல், நான்காண்டிற்கு
ஒருமுறை செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறன்று நடக்கிறது.
சுவீடன் தமிழர் எனப்படுவோர்
தமிழ்ப் பின்புலத்துடன் சுவீடன் நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். சுவீடனில் 2000 தமிழர்கள்
வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு
யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர்.
2018ம் ஆண்டு
செப்டம்பரில் வெப்பகாற்று சுவீடனை தாக்கியது. இது பருவநிலை மாற்றம் குறித்த
விழிப்புணர்வையும், விவாதத்தையும்
ஏற்படுத்தியது. எனவே சுவீடன்
மக்கள் பெருமளவில் விமானத்தில் பயணிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.
விமானத்தில் பயணிப்பதற்கு எதிரான
இயக்கம் அந்நாட்டில் வளர்ந்து வருகிறது. 'பறப்பது
அவமானம்' என்ற கோஷத்துடன் இந்த இயக்கத்தை முன்னெடுத்து
வருகிறார்கள்.
முக்கிய சுற்றுலாத் தளங்களாக ஸ்டோக்ஹோம், கோதென்பர்க், உப்சாலா,
தென்கிழக்குக்
கடற்கரை, மால்மோ என்பன விளங்குகின்றன.
📂தொகுப்பு:செ.மனுவேந்தன்
ReplyDeleteசிறப்பான பதிவிற்கு காலைவணக்கத்துடன் நன்றிகளும் வாழ்த்துக்களும்
ReplyDeleteமிகவும் அருமை. ஒவ்வொரு நாடுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பது அவசியம். அத்துடன் இந்த நாடுகளில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களையும் சேர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நன்றி.
ReplyDeleteநல்ல செய்திகள்..
சுவிடன் நாடு போகத்தான் இருக்கிறேன்
இதெல்லாம் பார்க்கத்தான் இருக்கு.
ReplyDeleteசிறப்பான தகவல்கள் அண்ணா