ஊரடங்கு உத்தரவால் மாணவர்கள் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாடக்கூட அனுமதிக்க முடியவில்லை. எனவே
அவர்கள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் குறிப்பாக செல்போனில்
தான் அதிகளவு நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களின் கண்கள்
பாதிக்கும் அபாயம் உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும்
மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து
குறைந்துவிடும். அப்போது கண்களை கசக்கினால் கண் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது.
மேலும் கண்களில் நீர்சத்து குறைவதால் அலர்ஜி ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
செல்போனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்துவது பாதிப்பை
ஏற்படுத்தும்.
ஸ்மார்ட்போன்
பயன்பாடு -
அத்துடன் கண்ணில் கட்டி உருவாகும். கண்களில் நீர்சத்து
பிரச்சினையை சரிசெய்ய கண் சிமிட்டலை அதிகப்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகளவில்
குடிக்கவேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் மற்றும் மீன் போன்றவைகளை உணவில் சேர்த்து வரவேண்டும்.
முக்கியமாக கேரட், பப்பாளி, இனிப்பு பூசணிக்காய் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
இதேபோல் டி.வி. அதிகநேரம் பார்க்கும்போது கண் எரிச்சல்
போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் 4 முதல் 6 மணி நேரம் வரை கணினி முன்பு அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை
கவனித்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து கணினி பயன்படுத்துவதால் கண் வலி,
தலைவலி போன்ற
பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்க கணினி பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள்
இருக்கையின் உயரமும், கணினியின் உயரமும் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள
வேண்டும்.
இதேபோல் ஆன்லைன் வகுப்பை செல்போனில் பார்க்கும்போது சரியாக
அமர்ந்து கொண்டு செல்போனை கையில் வைத்து கொண்டு பார்க்கலாம். படுத்துக்கொண்டு
செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் விளக்குகளை
அணைத்துவிட்டு இருட்டில் செல்போன் பார்ப்பதை தவிப்பது நல்லது.
📲நன்றி:மாலைமலர்
0 comments:
Post a Comment