ஒளிக் கலைஞர் பாலு மகேந்திரா




இலங்கையில், மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தில், 1939 மே 20ம் தேதி பிறந்தவர், பலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. மஹாராஷ்டிர, புனேயில் உள்ள, 'பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட்' நிறுவனத்தில், ஒளிப்பதிவு பயின்றார்.கடந்த, 1971ல், நெல்லு எனும் மலையாளப் படத்தில், ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முள்ளும் மலரும் படத்திற்காக, இயக்குனர் மகேந்திரன் இவரை, தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார். அழியாத கோலங்கள் படத்தின் மூலம் இயக்குனரானார் பாலு மகேந்திரா.மூடுபனி, மூன்றாம் பிறை, தலைமுறைகள் உட்பட, 15 படங்களை இயக்கி உள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில், ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இயக்குனராக வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள் மற்றும் தலைமுறைகள் ஆகிய படங்களுக்காக, நான்கு தேசிய விருதுகளும்; ஒளிப்பதிவாளராக, கோகிலா, மூன்றாம் பிறை படங்களுக்காக, இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். 2014 பிப்.,- 13ம் தேதி இயற்கை எய்தினார்.ஒளிக் கலைஞர் பாலு மகேந்திரா பிறந்த தினம் இன்று!

📽📽📽📽📽📽📽📽📽📽📽📽📽

0 comments:

Post a Comment