திருகோணமலை/Trincomalee
⧭⧭⧭⧭⧭⧭⧭⧭⧭
திருகோணமலை அல்லது
திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே
பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.
இலங்கையின்
கீழ் கரையில் அதாவது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக
அனுராதபுரம்,
பொலநறுவை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு
ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.
திருக்கோணமலையில்
தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள்
ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே
பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
பிரித்தானியர் ஆட்சி
1957 வரை
திருக்கோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில்
பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை
பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. 1950 களில்
பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து
இருப்பதுடன். சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருக்கோணமலையே
பிரித்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருக்கோணேச்சரம்
இது
இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். உலகில் உள்ள
வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜ என்ற
மன்னன் கி.மு. 1300ஆம்
ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. இது தேவாரப்
பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
போர்த்துக்கேயர் கோவிலை அழித்தமை
கி.பி.
1624
ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து
கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி
வைத்தான். கோயிலின்
மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம்
தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும்
அழித்தனர். அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர்.
இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
கோட்டை
சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல்
சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை
உணர்த்தும்.
இராணுவ காட்சியகம்
இங்கு இராணுவ
காட்சியகத்தில் முதலாம் உலகப் போர் காலத்திலிருந்து இன்றுவரையில் உபயோகித்த/உபயோகிக்கும்
ஆயுதங்கள், மட்டுமல்லாது உள்நாட்டு யுத்தத்தில் விடுதலைப் புலிகள் பாவித்த புதுவகையான எந்த நாட்டிலும் இல்லாத பேராயுதங்களும் காட்சிப்
படுத்தப்பட்டிருந்தன.
கன்னியா வெந்நீரூற்று
கன்னியா
வெந்நீரூற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும்.
குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 - 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர
வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில்
செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு
வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும்.
தமிழ்
வரலாற்றின் படி,
பத்துத்
தலை படைத்த இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக உடைவாளை உருவி
ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும்
ஐதீகம் உண்டு.
தற்போது
பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று நீராடுகின்றனர்.
வரலாறு
📂செ.மனுவேந்தன்
திருகோணமலையின் வரலாறு, திருக்கோணேசர் பெருமை, கன்னியா வெந்நீரூற்றின் சிறப்புகள் அருமையாக கூறப்பட்டுள்ளது. சுற்றுலா செல்பவர்களுக்கு இலகுவாக அல்லது உதவியாக இருப்பதற்கு திருகோணமலையின் பார்வை இடக்கூடிய வேறு ஏதாவது இடங்கள் இருந்தால் அவற்றையும் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றி.
ReplyDelete