மடியும் மனிதரடி!






நிறைவிலா நெஞ்சில்
குறை கண்டு கொண்டு
பறை பெருக்கி நாவால்
கறை  கொண்ட சில  மனிதரடி!
 🕺🕴
உறவென்றால் உதறி
கறள் கொண்டு கூறி
புறம் திரிந்து பேசும்
அறம் அற்ற சில மனிதரடி!
🧍 🕺
உயர்ந்தவனில் உறிஞ்சி
பயந்தவனில் பாதமிட்டு
நயம்படா  நாவாட்டிடும்
சுயநலம் சூழ்ந்த சில மனிதரடி!
 🕴
பணத்தின் மேல் பல்லிளித்து
பிணம்போல் புலனிழந்து
குணக்கொள்  மானிடர்க்கும்
குழிபறிக்கும் சில மனிதரடி! 
 🧍
துடிப்பினிலே தூயவனாய்
நடிப்பினிலே நாயகனாய்
வடிப்பதிலே வஞ்சகனாய்
வருத்தி வலியும் சில மனிதரடி!
🕴🕺 
தேடிவந்து  தேவையெனில்
ஓடியொளிந்து ஒழிந்ததுமே
சூடியே குற்றம் சுமத்திடும்
கேடிக் கொப்பான சில மனிதரடி!   
 🕺 🧍
வாழ்ந்திடில் வாழவைத்தானிறை 
வீழ்ந்திடில் விதியை நொந்து
சூழ்ந்திடும் அறியாமை இருளில்
மூழ்கியே  மடியும்  மனிதரடி!

✍செல்லத்துரை,மனுவேந்தன் 
←←←→→→


2 comments:

  1. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிMonday, May 18, 2020


    வாழ்ந்திடில், வாழ வைத்தானிறை, வீழ்ந்திடில், விதியை நொந்து....... ஆழமான கருத்து தாங்கிய வரிகள். கவிதையின் கருத்துக்கள் தத்துவத் தொகுப்பாயினும் இருதயத்தை கணக்கச் செய்கிறது, ஏதோ ஒரு வரிக்கு நாமும் சொந்தமான நாட்கள் இருக்கிறது என்பதால்.... சிறப்பான வித்தியாசமான முறையில் கருத்துக்களை பதிவிட்டமை பாராட்டுக்கு உரியது. நன்றி.

    ReplyDelete
  2. கிருபைநாதன். கந்தசாமிMonday, May 18, 2020

    தாய் தன் மகளுக்கு கூறுவதுபோல் பல தரப்பட்ட மனிதர்களையும் வெளிப்படுத்திய உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete