இரவு முழுவதும் விளையாடுவது, பின்பு பகலில் தூங்குவது,பெற்றோர் பேச்சைக் கேட்காமல் இருப்பது நமக்கு தோன்றியவற்றை
செய்வது என மனிதர்கள் பருவ வயதில் செய்வதை நாம் பரவலாகக் காணலாம்.
ஆனால் மனிதர்களைப்போல செல்லப்பிராணிகளாக வளர்க்கும்
நாய்களும் வளர் இளம் பருவ வயதில் இதே போன்ற சில மாற்றங்களை எதிர்கொள்ளும்.
பிரிட்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வு ஒன்றில் நாய்கள் பருவ வயதை எட்டியவுடன் மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளும்
எனத் தெரியவந்துள்ளது.
அதற்காக புகைபிடிப்பது அல்லது தன்னை வளர்ப்பவரை திட்டுவது
போன்றல்லாமல், தம்மை
வளர்ப்பவர்கள் இடும் உத்தரவை கேட்காமல் இருப்பது போன்றவற்றை நாய்கள் செய்யும்.
மேலும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பது அந்த நேரத்தில் கடினமாக இருக்கும். பருவ வயது
இருக்கும்வரை நாய்கள் அப்படித்தான் இருக்கும்.
நாட்டிங்ஹாம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்களைச்
சேர்ந்த குழு ஒன்றால், 69 நாய்கள் அதன் பருவ வயதை அடைவதற்கு முன்னரும் (நாய்களுக்கு ஐந்து
மாதமாகியிருந்தபோது) பருவ வயதில் இருக்கும் போதும் (நாய்களுக்கு எட்டு
மாதமாகியிருந்தபோது) கண்காணிக்கப்பட்டன.
இந்த நாய்கள் பருவ வயதில் தங்களுக்கு செய்யத் தெரிந்த
செயல்களாக இருந்தாலும், அவற்றுக்கு
பணிக்கப்பட்ட உத்தரவை மதிக்க நீண்ட நேரம் எடுத்து கொள்கின்றன. 'உட்காரு' என்ற உத்தரவுக்கு உட்காரத் தெரிந்தாலும் அதை நீண்ட நேரம் கழித்துதான்
செய்கின்றன.
285 நாய் வளர்ப்பவர்களிடம் அவற்றின் நடத்தை குறித்த கேள்விகள்
கேட்கப்பட்டபோதும், இதையேதான்
அவர்களும் கூறினார்கள். பருவ வயதில் இருக்கும் விலங்குகளைப் பயிற்சி செய்வது
கடினம் என்றனர்.
"ஆனால் இந்த நடவடிக்கைகள் தங்களை வளர்ப்பவர்களிடம் மட்டுமே
இந்த விலங்குகள் காட்டுகின்றன. மற்றவர்களை சந்திக்கும்போது சரியாக நடந்து
கொள்கின்றன. இது உங்கள் அம்மாவிடம் மட்டுமே நீங்கள் கோபத்தைக் காட்டுவது போன்ற
செயல் ," என்கிறார்
விலங்கியலாளர் டாக்டர். நவோமி ஹார்வே.
நன்றி: அறிவியலுக்காக பி.பி.சி
குறிப்பு:ஆனால் பருவக்கோளாறினால் மனிதரைப்போல் நாய் எனும் நன்றியுள்ள பிராணி தன் இனத்திற்கோ அல்லது மனிதருக்கோ தீங்கு இழைப்பதில்லை.
குறிப்பு:ஆனால் பருவக்கோளாறினால் மனிதரைப்போல் நாய் எனும் நன்றியுள்ள பிராணி தன் இனத்திற்கோ அல்லது மனிதருக்கோ தீங்கு இழைப்பதில்லை.
No comments:
Post a Comment