பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 06:

[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
-கி .பி  600 ஆண்டுகளுக்கு பின்-

பிராமணீயம் கொண்டு வந்த சாதி முறையானது  ,குருவையும் அரசனையும் பிரிப்பதற்கு  முன்பு ,பண்டைய தமிழர்கள் அரசனை தெய்வமாகவே போற்றினார்கள் அல்லது தெய்வத்தின் ஒரு முகவராகவே கருதினார்கள் ஆண்டவனுக்கான தற்கால  சொற்களான "கோ, இறை, ஆண்டவன்" முன்பு அரசன் ,பேரரசன்,வெற்றி வேந்தர் என்பதையே குறித்தது .கோயில் என்பதன் கருத்து அரச வீடு அல்லது அரமனை என்பதே .புறநானுறு 186 கூறுவது 

"நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே."

அரசன் தவறு/பிழை செய்யும் போது,அரசு/நாடு,பட்டிணியால்/பஞ்சத்தால்  அல்லது குழப்பத்தால் வருந்த/துயருற நேர்ந்தது போன்ற அடிப்படைத்தத்துவங்கள், சிவாவிற்கும் மதுரை அரசி மீனாட்ச்சிக்கும்  நடந்த பழங்கதை/புராண கல்யாணம் போல,பின் இந்து சமயத்தில் சேர்க்கப்பட்டன . 


சோழ ,சேர ,பாண்டியர்களான  மூவேந்தர்களை  "வாண்புகழ் மூவர்" என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.சாதிக்கொள்கை சைவக்கொள்கள்  இல்லையே. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது இல்லையே. சாதிவெறி சைவநெறி இல்லை. இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை/இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது.



"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் 
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் 
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் 
மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே."  
-திருநாவுக்கரசர் (தேவாரம்)



"கங்கை ஆடிலன் காவிரியாடிலன், கொங்கு தன்குமரித் துறையாடிலன் துங்கு மாகடலோத நீர் ஆடிலன் எங்கும் ஈசன் எனதாவர்க்கில்லையே"- திருநாவுக்கரசர்.

  

sekkizhar
உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் மனித வர்க்கம் வகுத்துக் கொண்டது தான். பக்திக்கு அப்படியில்லை என்பதே நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரம்.இவரது இனத்தை புலையர் என்பார்கள்.அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எனவே, மனதிலேயே சிவனை வணங்கிக் கொண்டிருந்தார் நந்தனார். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது என திருப்பணிகளைச் செய்வார். தங்கள் ஊர் அருகிலுள்ள திருப்புன்கூர் சிவபெருமான தரிசிக்க நந்தனாருக்கு நீண்ட நாள் ஆசை, ஒரு நாள் திருப்புன்கூர் கிளம்பி விட்டார். கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், வெளியே நின்றபடியே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெரிகிறதா என எட்டி பார்த்தார். நந்தி சிலை மறைத்தது. எதுவும் தெரியவில்லை. வெளியே நின்றபடி சிவனைப் புகழ்ந்து பாடி வணங்கினார். உருகிப் போனார் சிவபெருமான். நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார்.நந்தி விலகிக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் நந்தி சிலை நகர்வதைக் கண்டு பயமும், பரவசமும் கொண்டனர். சிலர் வாதம் செய்வார்கள். நந்தியை விலகச் சொன்ன சிவன், அவரை உள்ளேயே அழைத்திருக்கலாம் அல்லவா என்று! தானாக அழைப்பதை விட, பிறரால் சகல மரியாதைகளுடன் எந்த ஒரு தீவிர பக்தனும், தனது இடத்துக்குள் வர வேண்டும் என சிவன் நினைத்தாரோ ?யார் அறிவார் ?

(தொடரும்)
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் :- Theebam.com: பண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01

3 comments:

  1. உங்கள் ஆய்வுக்கட்டுரைகள் பிரமாதம்.ஆனால் "சிவபெருமான் நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார்.நந்தி விலகிக் கொண்டார்."
    என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே இப்படியான கருத்துக்கள் வரக்கூடும் என ஒரு நண்பர் என்னுடன் வாதாடியுள்ளார்.தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, July 27, 2013

      "Theebam/ஆடி-2013:கடவுள் ஒருநாள்....பறுவதம் பாட்டி [ஆக்கம்:செ. மனுவேந்தன்]".இல் இருந்து:

      பறுவதம் பாட்டி:“அப்போ,புராணக் கதைகளும் உண்மையில்லை என்கிறீர்களா?"
      "ஜோடிக்கப்பட்ட சிறு சம்பவங்கள்."

      பறுவதம் பாட்டி:“அப்பிடியெண்டா?”
      “சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதினால்,ஆத்திரம் அடைந்திருந்த சமணர்கள் சம்பந்தரின் திருமண வைபவம் நடந்த ஆலயத்தினை தீ வைத்து ஆலயத்தினுள் இருந்த அனைவரையும் தீயிட்டுக் கொன்றனர்.இதே போலவே அனைத்து கதைகளும் மனிதர்களினால் தத்தம் கற்பனைகளுக்கு இரையாக்கப்பட்டுள்ளன.”

      அப்படித்தான் இந்த கதையும் .உதாரணமாக "பெரிய புராண ஆராய்ச்சி" என்ற நூலினை எழுதிய பேராசிரியர் இராசமாணிக்கனார்,தனது "பல்லவர் வரலாறு" எனும் நூலில் சுந்தரர் வழக்கு குறித்துப் பெரிய புராணம் கூறுவனவற்றை எடுத்துக் கூறியதில் இருந்து,பெரிய புராணமே அப்படி அற்புதங்கள் செய்தார் எனும் கற்பனைச் செய்தி பரவியதற்குக் காரணம் என்பது தெளிவாகிறது என முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் கூறுகிறார் .

      63 நாயன்மார்களில் 8 பேர் தீண்டத்தகாத இனத்தவர்கள், மற்றவர்கள் பிரமணர்கள் ,முடிமன்னர்கள், குறுநிலமன்னர்கள். வணிகர்கள். வேளாளர்கள். ஆயர்கள் ஆவார்!ஆகவே அனைத்து மக்களும் அதில் அடங்குகிறார்கள். அது மட்டும் அல்ல உண்மையில் வடமொழி எதிர்ப்பாளர்களாகவே நாயன்மார்கள் பொதுவாக இருந்திருக்க வேண்டும். தமிழிலும் வழிபாடு செய்யலாம் என உ ணர்த்தவே தேவாரங்களை தமிழில் பாடினார்கள் போலும்.பிற்பாடு நாயன்மார்களின் வரலாறுகளையும் பாடல்களையும் தொகுத்தவர்கள் நம்பியாரூரரான சுந்தரர்[ஆதி சைவர்] தமது திருத்தொண்டத் தொகையில் ஒவ்வோர் அடியவர் பெருமையையும் ஒரு அடியில் கூறுகிறார்[ தொகைநூல்]. இதனைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பி[பூசாரி குடும்பத்தார்] திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றினார்[வகைநூல்].இந்த இரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார்[இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதன் மந்திரி] அடியாரின் சிறப்பை ஒரு புராணத்தால் விளக்கினார் [பெரிய புராணம்/விரிநூல்] இவர்கள்[நம்பியாண்டார் நம்பி & சேக்கிழார்], தெரிந்தோ, தெரியாமலோ வரலாறுகளைத் திரித்திருக்க வேண்டும். அதாவது வைணவத்திற்குக் கற்பனை வழங்கியவன் கம்பன் என்றால் .சைவத்திற்குக் கற்பனை வழங்கியவர் சேக்கிழார் போலும்!

      லோகசாரங்கா என்ற பிராமண அர்ச்சகர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த திருப்பாணாழ்வாரைக் கல்லெறிந்து காயப்படுத்தியபோது, திருவரங்கக் கோயிலில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்த பெருமாளின் நெற்றியில் குருதி கொட்டியது. அர்ச்சகரின் கனவில் வந்த ஆண்டவன், திருப்பாணரைக் கருவறைக்குக் கொண்டுவரும்படி கட்டளை​யிட்டான். மறுநாள் காலை லோகசாரங்கா தாழ்த்தப்பட்ட திருப்பாணரைத் தோள் சுமந்து கோயில் கருவறைக்குள் கொண்டு சேர்த்தார். 1,100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிராமணர் தோள் சுமக்க, ஒரு தாழ்த்தப்பட்ட அடியார் ‘ஆலயப் பிரவேசம்’ செய்தார். இதைக் கற்பனைக் கதை என்று புறந்தள்ளினாலும், ஒரு சமூக சமத்துவத்துக்கான சமிக்ஞை இது என்பது உண்மை இல்லையா?

      அப்படித்தான் நான் நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரத்தை பார்க்கிறேன்.

      ‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கும் சுந்தரர் அடுத்த வரியில், ‘திருநீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேன்’ என்று சாதி சமத்துவம் கொண்டாடவில்லையா?

      அன்புடன்

      கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

      Delete
  2. பண்டைத் தமிழர் அரசையும் இறைவனாக மதித்தனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. கோன் உயர குடி உயரும் என ஔவையார் பாடி உள்ளார். சைவசமயம் வரலாற்று பகுதிகளின் பல இடங்களில் சாதி பற்றிய தகவல்கள் உள்ளன. ஆனால் இது இறைவனால் தோன்றியது? மனிதனால் உருவாக்கப்பட்டதா? இது சர்ச்சைக்குரிய விடயமாகவே உள்ளது. நந்தனார் கதை உண்மை. ஆனால் அவர் பிறப்பின் இரகசியம் வேறு.....கருத்துக்கள் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete