பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 05:


 [The religion of the ancient Tamils]


[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


-கி .பி  600 ஆண்டுகளுக்கு பின்-
சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார்அவர் பாடிய திருமந்திரம்  3,027  பாடல்களைக்   கொண்டதுஇதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்குகிறது.
'ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே-திருமந்திரம் 2104'.அது போலவே "ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது" -திருமந்திரம் 2962 கூறுகிறது.இதன் மூலம் அவர் எல்லா தமிழரையும் சாதி வேறுபாடு இன்றி ஒன்றாய் இணைத்தார் .அது மட்டும் அல்ல திருமூலர் கோட்பாட்டை எந்த பகுத்தறிவுவாதிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.மேலும்

அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்கிறார் திருமூலர்.அதாவது "அன்பே  சிவம்"என ஆணித்தரமாக கூறுகிறார்.
"அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்என்று சுந்தரரும்
"அவன்  அருளாலே அவன் தாழ் வணங்கி "என்று மாணிக்கவாசகரும் கூறியுள்ளார்கள்.
பல வகைப்பாடான கடவுள் தன்மையை[இறைமையை]   புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள/சந்திக்க நேர்ந்தாலும் ,தேவாரங்களை மிக நுணுக்கமாக  படிக்கும் போது,அவை அதற்கு எதிர் மாறானதே  உண்மை என சுட்டிக் காட்டும்.எல்லா நாயன்மார்களும்  ஒப்புயர்வற்ற கடவுளின்  தனித்தன்மை[ஒருமைஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .மாணிக்கவாசகர் தமது  திருத்தெள்ளேணத்தில்
 "ஒரு நாமம்ஓர் உருவம்ஒன்றும் இல்லாற்குஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ!"
என்கிறார்.அதாவது ஒரு பெயரும்ஒரு வடிவமும்,  ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு,  ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?.என கேள்வி கேட்கிறார் .

நற்றிணை 170 இல்,

"மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே
எழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே"

ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனதுஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல--இப்படி ஆரியரை விரட்டியதை எடுத்து கூறுகிறது.இது நடந்தது சங்க காலத்தில் .ஆனால் அதன் பின்........???

(தொடரும்)
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்↴↴ 
Theebam.com: பண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01

1 comment:

  1. சைவசமயம் அல்லது இந்துசமயத்தில் வரலாற்றின் சரித்திரங்களை ஆராய்ந்து பார்த்தால் மனிதமூளைக்குள் அடங்காத கருத்துக்கள் கலந்து குவிந்து விளைந்து கிடக்கிறது. கதாசியரின் கருத்துகளின் பார்வையின் திசை ஒன்றாகவும் எனது பார்வையின் திசை ஒன்றாகவும் இன்னும் ஒருவரின் பார்வையின் திசை வேறாகவும் இருக்கும். மொகாஞ்சிதாரா, ஹரப்பா, சிந்துவெளி நாகரீகங்களின் ஆரம்ப நிலையில் இருந்தே சைவசமயம் கடவுளின் திருநாமங்களின் வரலாறுகளின் கருத்துக்கள் தகவல்கள் அருமை. ஆயிரம் திருநாமங்களும் உறவுமுறைகளும் இவற்று எல்லாம் விளக்கம் உண்டு. தொடரும் கருத்துக்கள் அருமை. நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். 🌹

    ReplyDelete