கை கழுவாத நாகரீக மனிதர்கள்



5ல் எடுத்த ஓர் ஆய்வின்படி கழிவறைக்கு செல்வோரில் 26.2% பேர் மட்டுமே கைகளை சோப்பால் கழுவுகின்றனர்.இன்னும் 10 ஆண்டுகளில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்ப வரும்போது, கை கழுவாமல் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவ்  ஆய்வு கூறியது.
இது ஒரு சிறிய பழக்கம் என தோன்றலாம். ஆனால் நாங்கள் இதற்காக 25 வருடங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இன்னும் இப்பழக்கம் குறைவாகத்தான் இருக்கிறது, என்கிறார் லண்டன் சுகாதாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கல்லூரியிலிருந்து பொது சுகாதார நிபுணர் ராபர்ட் ஆங்கர்.

ஏழ்மை மிக்க நாடுகளில், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சோப்பு வாங்க வசதியின்மையை ஒரு காரணமாக கூற முடியும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் 27% மக்களுக்கு மட்டுமே இந்த சோப்பு போன்ற பொருட்கள் கிடைக்கிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்பின் கணக்குப்படி 3 பில்லியன் மக்கள் தங்கள் வீட்டில் சோப்பு போன்றவை இல்லாமல் இருக்கின்றனர்.

ஆனால் வளர்ந்த நாடுகளில் கூட 50% பேர்தான் இதை கழிவறைக்கு சென்று வந்த பின் சோப்பு பயன்படுத்துகின்றனர்.

1850இல் இருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் இந்த கை கழுவும் பழக்கத்தால் மனிதனின் சராசரி ஆயுள் கூடுகிறது என நாம் தெரிந்து கொள்ளலாம். இதனால் நாம் இதை உயிரைக் காக்கும் ஒரு பழக்கமாக பார்க்க வேண்டும்.

இந்த சிறிய பழக்கம் பெருந்தொற்று மற்றும் பெரிய பிரச்சனைகளை நம்மிடம் வராமல் காக்கிறது.

2006ல் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் தொடர்ந்து கைகளை நன்கு கழுவும் பழக்கமுடையவர்களுக்கு சுவாசக் கோளாறு வருவதற்கு 6 % முதல் 44 % சதவீதம் வரை வாய்ப்புகள் குறைகிறது என கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று பரவும் விகிதத்தை அறிவதற்கு அந்தந்த நாட்டின் கை கழுவும் பழக்கத்தைக் கணக்கில் எடுத்து கொள்ளுதல் ஒரு நல்ல முறையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கழிவறைக்கு சென்று கை கழுவாமல் இவ்வாறு திரும்புவதற்கு சோம்பேறித்தனம் மட்டும் காரணமாக அமைவதில்லை.
சில மனரீதியான காரணங்களும் மக்களை கைகழுவுவதிலிருந்து தடுக்கிறது.

மனிதனின் கற்பனைத்தனமான நம்பிக்கை, சாதாரணமாக இருப்பது போல் நினைக்க வைப்பது மற்றும் அருவருப்படையக் கூடிய எல்லை ஆகியவையும் கை கழுவுவதைத் தடுக்கிறது.

வளர்ந்த நாடுகளில் கை கழுவது பல நேரங்களில் தவிர்க்கப்பட்டாலும், அப்பழக்கம் இல்லாதவர்கள் அவ்வளவாக நோய்வாய்ப்படுவதில்லை என்பதே கை கழுவும் பண்பின் பிரச்சனை என்கிறார் ஆங்கர்.

63 நாடுகளிலிருந்து 64,002 பேரிடம் செய்த ஓர் ஆராய்ச்சியின் படி கழிவறைக்கு சென்று கை கழுவுதல் தன்னிச்சையாக அவர்கள் செய்யக்கூடிய ஒரு பழக்கம்.

இதை சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் நெதர்லாந்தில் பாதிக்கும் குறைவானோரே ஒப்புக்கொண்டனர். ஆனால் சௌதி அரேபியாவில் 97 சதவீதம் பேர் இது அவர்களின் வாடிக்கை என ஒப்புக்கொண்டனர்.

ஆண்களைவிட பெண்கள் அதிகம் கை கழுவுகிறார்கள் ஓர் ஆய்வு கூறுகிறது. பிரிட்டனில் உள்ள ஒரு மோட்டார் சர்வீஸ் நிலையத்தில் பெண்கள் இரு மடங்கு அதிகமாக கைகளைக் கழுவுகின்றனர் என ஆங்கர் கண்டறிந்துள்ளார்,

கோவிட்-19 பெருந்தொற்று வந்தபோதிலும் 65% சதவீத பெண்கள் மற்றும் 52% சதவீத ஆண்கள் மட்டுமே தங்கள் கைகளைக் கழுவுகின்றனர். சமுதாய பழக்கங்களினால் கூட கை கழுவும் பழக்கத்தில் வேறுபாடு இருக்கலாம் என ஆங்கர் விவரிக்கிறார்.

கொரோனாவுக்கே திருந்தாத இவ்வுலகம் என்றுதான் திருத்துமோ!


 ✋நன்றி:பிபிசி 

1 comment:

  1. மனுவேந்தன்Thursday, May 07, 2020

    ஒரு சீனா காரரின் உணவுக்கடையில் ஆண்கள் மலசலகூடத்தில் சலம் பகுதி அடைத்துவிட்ட்து. அது பற்றி அருகில் வந்த சமையல் காரனிடம் கூறினேன். அவன் கையில் கையுறை கூட இல்லாது . அதற்குள் கையை வைத்து துப்பரவு செய்து தான் கெட்டிக்காரன் என்று கூறினான், நானும் அவனை பாராட்டிக்கொண்டு அவன் கூட சென்றேன் .அவன் கையை கழுவவில்லை. தனது தொழிலை ஆரம்பித்துவிட்டான்

    ReplyDelete