சிரிக்கச் சில நிமிடம்



01
கணவன் : அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க....
மனைவி : சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் : ஓகே ...அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
மனைவி : என்னது...எங்கம்மாவுக்கா....? சொல்றத சரியா..சொல்றீங்களா...ஒன்னத்துக்கும் லாயக்கு இல்லே... உடனே... டாக்சிக்கு... சொல்லுங்க... ஆபீசுக்கு ஒரு வாரம்... லீவும்.... சொல்லுங்க... போய்... பாத்துட்டு வந்துடுவோம்.

02
கணவன்: அநாவசியமா! எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!.
மனைவி : உந்த பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!

03
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!

04
மனைவி : என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
கணவன் : வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...
மனைவி : ???????????????????

05
மனைவி : ரோஸி‌ங்கறது யாரு‌ங்க?
கணவன் : ‌வி‌‌ழி‌த்தபடி, அது கு‌திரை‌ப் ப‌ந்தய‌த்‌தி‌ல் நான் பணம் கட்டு‌ம் குதிரையின் பெயர், ஏ‌ன் கேட்கிறாய்?
மனைவி : அப்படியா, அந்த குதிரை இன்று மதியம் உங்களுக்கு போன் ப‌ண்ணு‌ச்சு.. அதா‌ன் கே‌ட்டே‌ன்.

06
மனைவி : ஏங்க, என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?
கணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப் படுத்துறே! பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு!

07
மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?
கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!

08
கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவன்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?
மனைவி : அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிர இருக்காங்களே, அதான்!

09
மனைவி : ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன் : உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

10
மனைவி : ஏங்க! சாதாரணமா இருக்கறப்ப முத்தே,மணியே-ன்னு கொஞ்சறீங்க…. குடிச்சா மட்டும் பேயே, பிசாசே-ன்னு திட்டுறீங்களே?
கணவன் : என்னடி பண்றது! போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது!!!???..

😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

No comments:

Post a Comment