ராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் வாயு!



நம் ஊர்களில் விளம்பரத்துக்காகப் பறக்கவிடப்படும் ராட்சத பலூன்களைப் பார்த்திருப்போம். ஆனால், வெளிநாடுகள் சிலவற்றில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ராட்சத பலூன்களில் வானில் பறந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில திரைப்படங்கள் டிஸ்கவரி சேனல்களில் நம்மில் பலர் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட ராட்சத பலூன்களில் ஹீலியம் வாயுதான் பயன்படுத்தப்படுகிறது. காற்றைவிட எடை குறைந்தது ஹீலியம். ஹீலியம் ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் எடையை மேலே உயர்த்தவல்லது. அதனால் பலூன், விமானங்கள், பாராசூட் போன்றவற்றில் இதைப் பயன்படுத்துகிறார்கள். இது தீப்பற்றாது மற்றும் எதிர்வினை புரியாது. எனவே, ஹீலியத்தை விபத்து ஏற்படுத்தாத நம்பகத்தன்மைகொண்ட ஒரு தோழனாக வேதியியலாளர்கள் பார்க்கிறர்கள்.

பிரான்சை சேர்ந்த பியரி ஜான்சன் மற்றும் இங்கிலாந்து வானியலாளர் நார்மன் லாக்யர் ஆகியோர்தான் ஹீலியம் வாயுவைக் கண்டறிந்தனர்.1868-ல் சூரிய கிரகணத்தின்போது, சூரியக் கதிர்களைப் பகுப்பாய்வு செய்தபோது ஹீலியம் கண்டறியப்பட்டது. சூரியனைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ஹீலியோஸ் என்ற வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. வேதியியலாளர்கள் எட்வர்டு பிரான்லாண்டு மற்றும் லாக்யர் ஆகியோர் இந்த பெயரைச் சூட்டினார்கள். ஹீலியம் ஒரு வேதியியல் தனிமம். அதன் அணுஎண் 2. ஹீலியத்திற்கு நிறம், சுவை, மணம் எதுவும் கிடையாது. உலகில் ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாகக் காணப்படும் தனிமங்களில் ஒன்று ஹீலியம். பூமியில் 24 சதவீதம் ஹீலியம் வாயு நிரம்பியுள்ளது. ஹீலியத்தைத் திரவமாகவும், திடப்பொருளாகவும் மாற்றி பயன்படுத்தலாம்.

ஹீலியம் வாயு வேகமாக மறுஉற்பத்தி ஆகக்கூடியது. எளிதாக மறுசுழற்சி செய்யவும் முடியும். எனவே, பல்வேறு பயன்பாட்டிற்கு ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன், ஹீலியத்தைவிட 7 சதவீதம் கூடுதல் மிதப்புத்தன்மை கொண்டது என்றாலும், அது தீப்பிடிக்கும் ஆபத்து கொண்டது என்பதால் அதை மிதப்பதற்குப் பயன்படுத்தாமல் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு ஹீலியம் கலந்த மருந்துக் கலவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்துறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது உள்பட இன்னும் பல பயன்பாட்டிற்கும் ஹீலியம் பயன்படுத்துகிறார்கள்.

கம்ப்யூட்டர்களின் வேகத்திற்கு கைகொடுப்பதிலும் ஹீலியத்தின் பங்களிப்பு உண்டு. ஹார்டுவேர் பொருட்கள் வேகமாகச் செயல்படவும், வெப்பமடையாமல் தடுக்கவும் ஹீலியம் பயன்படுகிறது. நாம் இன்று அதிகமாகப் பயன்படுத்தும் இன்டர்நெட் மற்றும் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்பு தொழில்நுட்பத்திலும் ஹீலியத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் இன்டர்நெட் கண்ணாடி இழைகள் மற்றும் தொலைக்காட்சி வயர்களின் உள்ளே ஹீலியம் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இது அவை உரசிக்கொள்ளாமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

🛸🛸🛸🛸🛸🛸🛸🛸🛸🛸🛸 

No comments:

Post a Comment