நடிகை ஜோதிகா சொல்ல மறந்த தகவல்



திரைப்பட நடிகர்கள் எல்லோருக்கும் பொதுவான
விடயம்  

கோவில் உண்டியலில் போடும் அதே பணத்தை ஆஸ்பத்திரிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் கொடுக்கலாமே என்ற ஜோசனையைப் போல இன்னும் பலவும் உள்ளன.

அவையாவன:

1. கோடிக்கணக்கான சம்பளம் வாங்கி, நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கு, எதோ அவர்கள் சமூக மேம்பாட்டுக்கு உழைத்து,  உலக சாதனை செய்துகொண்டார்கள் என்பதுபோல காட்டி, பலவிதமான விருதுகளை, விதம் விதமான விழாப்  பெயர்களுடன், வெவ்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களாலும் வருடம் பூராவும் நடத்தப்படும் கொண்டாட்டங்களுக்கு செலவு செய்யும் பல கோடி ரூபா தொகை; அதே பணத்தை ஒவ்வொரு வைத்திய சாலை கட்டிக் கொள்ள கொடுத்து விடலாம்..

2. இந்த விழாவுக்கான ஆடம்பர மேடை அமைப்புக்காக செலவு செய்யப்படும் இலட்சங்கள்; அதை   ஒவ்வொரு பள்ளிக்ககூடம் கட்டிக்கொள்ள கொடுத்து விடலாம்.

3. ஒவ்வொரு நடிகரும் வந்திறங்கும் சொகுசு வாகனத்தில் வராதுஒட்டோவில் வந்தால், அப்பணத்தினால் ஒரு ஊரையே தண்ணீர்ப் பஞ்சமின்றி  வாழ வைக்கலாம்.

4. அவர்கள் அணிந்தவரும் உடுப்புக்குப் பதில் கதர் உடுப்போடு வந்தால், அப்பணத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு ஒரு கிழமைக்கு உணவளிக்கலாம்.

5. அவர்களின் 'மேக்கப்' இல்லாமல் வந்து, அந்தப் பணத்தை கொடுத்து ஒரு தெருப் பிச்சைக்காரனுக்கு ஒரு மாதத்திற்கு பசி தீர்க்கலாம்.

6. அவர்கள் நடிக்கும் படங்களை தியேட்டர் சென்று பார்த்து விரயம் ஆக்கும் பல ஆயிரம் ரூபாக்களால் வீட்டில் ஆரோக்கியமான நல்ல உணவினை சாப்பிட்டு மகிழலாம்.

7. சினிமாவில் ஏழைகளின் நண்பன் என்று காட்டுவதுபோல, நிஜ வாழ்விலும் ஆடம்பர அரண்மனைகளில் வசிக்காது மண் குடில்களை வாழ்ந்து , அதே பணத்தை சேரிச் சனங்களுக்கு வீடு , மலசல கூடம் அமைக்கப்  பயன் படுத்தலாம்..

8. கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் என்று செலவு செய்யும் அதே பணத்தை வீதி திருத்தப் பயன்படுத்தலாம்.

9.  திரைக்கதைக்காக அமைக்கப்படும் ஒருகிராமம் அதற்கு செலவழிக்கும் பணத்தினை அல்லது
  ஐந்து,பத்து  அறை/அரச மாளிகை போன்ற  வீடுகளைக் கொண்டிராது   அளவான வீட்டில் இருந்துகொண்டு  வீடு அற்றவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கலாம். 

10.ஒரு சண்டைக் காட்சிக்காக பலகோடி செலவில் அமைக்கப்பட்டு நொறுக்கப்படும் மரக்கறி,மீன் சந்தை  ஒரு கிராம மக்களின் கையில் கொடுத்து தொழில் ஆரம்பிக்க வைத்தால்  அவர்களை காலமெல்லாம் வாழவைக்க முடியும்.

இப்படி, இப்படி இன்னும் பல ஜோசனைகள் எழுந்துகொண்டே  இருக்கும்.

நீங்கள் தான் இதற்கு  ஏதாவது நல்ல ஒரு வழி  இருந்தால் சொல்லுங்கள்!
ஏனெனில்  இதை ஒரு நடிகையான ஜோதிகாவால் கூறமுடியாது,கூறவும் கூடாது.ஆனால் அவர் குடும்பமே சமூக சேவையில் மூழ்கி இருக்கிறது. ஏனைய நடிகர்கள்....?

( இது வாழ்க்கையின் ஒவ்வொருவருக்கும் ஒரு சம நிலை இருக்கவேண்டும் என்பதை விளக்கும் கட்டுரையே ஆகும்)

செல்வதுரை,சந்திரகாசன்

No comments:

Post a Comment