உயிரே!



"அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து 
அனு தினமும்   அடைக்கலம் அளித்து 
அக்கறையாய் பேசி     அமுதம் ஊட்டி 
அமைதி தந்து   அறிவூட்டிய உயிரே !"

"ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி
ஆலோசனை தந்து ஆணவம் அகற்றி
ஆரத் தழுவி          ஆசை தூண்டி
ஆறுதல் படுத்தி  ஆணாக்கிய உயிரே !"

"இடுப்பு வளைவு     இன்பம் சேர்க்க
இதயம் மகிழ்ந்து    இதழை பதிக்க
இளமை பருவம்      இழுத்து அணைக்க
இரக்கம் கொண்ட இனிய உயிரே!"

"ஈரமான நெஞ்சம் ஈர்த்து பிணைக்க
ஈவிரக்கத் துடன் ஈருடல் ஓருயிராக
ஈட்டிய நட்ப்பு  ஈன்றார் வாழ்த்துபெற
ஈனமாந்தர் விலக ஈடுஇணையற்ற உயிரே!"

"உடலின் அழகு    உள்ளம் கவர 
உறவு கொள்ள     உடன்பாடு கேட்டு
உரிமை நாட்ட    உறுதிமொழி பெற
உரத்து உரைக்கிறேன் உயிரும் நீயே!’’

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

[

1 comment:

  1. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிMonday, April 20, 2020


    அருமை. உறவு கொள்ள, உடன் பாடு கேட்டு, உரிமை நாட்ட, உறுதி மொழி பெற. உரத்து உரைக்கிறேன். என் உயிரும் நீயே என்ற உயிர் ஓட்டமான வரிகள் அருமை.

    ReplyDelete