"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்"





"மேல்த்  தாவணி காற்றில் பறக்க
புல் தரைகள் வெட்கிக் குனிய
கால்கள் சொருகியதைக்  கேட்டுப் பாரு
நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்"

"நெற்றி யுடன் நெற்றி மோதி 
நெஞ்சு இரண்டும் கலந்து துடித்து
நெருப்பாய் எரிந்ததைக்  கேட்டுப் பாரு 
நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்"

"நெருங்கி அனைத்து அழகு ரசித்து
நெகிழ்ந்து பேசிய அந்தத்  தருணத்தின்
நெடுங் கதை யதனைக் கேட்டுப் பாரு
நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்"

"மெல்ல வந்து மடியில் சாய்ந்து 
சொல்லித்  தந்த நெளிவு சுளிவுகளின் 
எல்லை அறியக்  கேட்டுப் பாரு
நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்"

"நெய்தல் நிலத்தின் உப்புக் காற்றில்
நெடுநாள் ஆசை கலைந்து விரிந்த   
நெடிய வரலாற்றினைக்  கேட்டுப் பாரு
நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்"

🌾[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment